பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள் 6


         நல்லவர்தம் நட்பெனவே வளரும் . சில
           நாளிலதன் ஈரவுடல் தளரும் - இன்பச் 
        சொல்லமுதப் பாவலரைத் -
               துண்டிவிட்டுக் கொண்டிருக்கும்
               சோதி . வான் . 
               ஊர்தி!
        ஆசைகொண்டு   விண்வெளியின் மீது - மதி
           ஆடையின்றி  யேஉலவும் மாது முகில்
        ஒசைகொண்ட    மண்டலத்தில்
                         ஊர்ந்துலவி வாழ்ந்துவரும்
                         ஊமை வெள்ளி 
                         ஆமை!
                         
                      
                      
          நோய் வராமல் இளைக்கும் வெண்ணிலா - இரவு 
          நேரந் தனை வெளுக்கும் வெண்ணிலா 
          தாய் உள்ளம் போல் குளிர்ந்த வெண்ணிலா -
                                             வெள்ளித்
          தட்டுபோல அமைந்த வெண்ணிலா,
                       தென்றல்

அலைகொண்ட நீரிணை ஆறுகள் விரிக்கும்: மணிகொண்ட தோகையை மாமயில் விரிக்கும்: வளர்தென்றல் பூக்களின் வாடையை விரிக்கும்!