பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள் 11

ஆறுகள் அனைத்தையும் அலைகடல் கூப்பிடும் உப்பை மட்டுமே ஓயாமல் சாப்பிடும்.

நெடுங்கடல் என்பது நெய்தல் நிலத்தின் ஒரத்தைக் குறிக்கும் உப்புநீர் விளம்பரம்

           -இதழ்: சுரதா (1-12-1970)

தள்ளிக்கொள் என்பதெல்லாம் மனிதன் சட்டம்! தழுவிக்கொள் என்பதுதான் கடலின் சட்டம்!

     *            *             *

வரையாத ஓவியமே தடாகத் தன்னில்

வளராத தாமரையே! நிலமும் நீரும் பிரியாத புணர்ச்சியுடன் இருப்ப தாலே

பெருங்கடலைப்புணரியென்றார்............

     *            *         *

இரவல் நிறத்தை எங்கோ வாங்கி இருண்ட கடலெனப் பெயர்பெற் றிருக்கும் போலிக் கடலோ வேலியில் லாதது: நிலத்தை விழுங்க நினைக்கும் நீர்நிலை!

    *            *         *  

அந்தக் காலத்து அரசன், பற்பல மாதரைத் தழுவி மகிழ்ந்தாற் போல, வளைந்தும் நெளிந்தும் வருகின்ற பற்பல நதிகளைப் புணரும் தண்ணிர் நாயகன்.

     *           *          *