பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 சுரதாகவிதைகள்

பூச்சூடிக் கொள்வதும் பொட்டிட்டுக் - கொள்வதும்
மான்போன்ற விழிகளில் மையிட்டுக் கொள்வதும்
தையலுக் குரிய தலையலங் காரம்.

இருபந்து எடுத்தாடும் இடையாள்; நல்ல
எழிலுடையாள்: அன்னத்தின் நடையாள்; மங்கைப்
பருவத்தாள்: செண்பகப்பூ நிறத்தாள்; நான்கு
பழங்காட்டும் செம்பவளக் கொடியாள்.

ஈயாத மாந்தர்பொருள் தேய்தல் போன்ற
இடையுடையாள்; ஒய்யார நடையாள் . . . . . . . .

தூங்கி விழிக்கும் சூரியனின் போரொளியை
வாங்கும் நிலாமுகத்து மங்கையரே! நங்கையரே!

நிலத்துக்குப் பெருமை நெல்லாம் - பெண்மை
நலத்துக்குப் பெருமை நாணமாம்!
- இதழ்: சுரதா (1-1-1969)

கனலும் புனலும் காற்றும் புகையும்
கலந்த கலப்பே கருநிற மேகம்
பணியும் பழுத்தசெங் கனியும் பற்பல
மதுமலர்த் தொகையும் மங்கைதின் தேகம்.

- நூல்: தேன்மழை