இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
சுரதா கவிதைகள்
நிறைந்தநாள் நிலவே! பூவே
நின்அங்கம் கட்டித் தங்கம்
குறுத்தொகைப் பற்கள், முத்தின்
குவியல்தான்; நெளிந்து நின்று
நிறந்தரும் கரிய கூந்தல்
நெடுந்தொகைச் செல்வ மன்றோ
–இதழ் : முக்கனி
–(1963–பொங்கல் மலர்)
அச்சமும்மச்சமும்
மறுவென்றால் களங்கம்; மருவென்றால் மச்சம்;
மறுவென்னும் களங்கம் மதியில் இருக்கும்.
மாந்தரின் உடம்பில் மச்சம் இருக்கும்.
அச்சம், உள்ளத்தின் அதிர்ச்சி யாகும்.
மச்சம், அழகின் அடையாள மாகும்.
–இதழ் : ‘சுரதா’ (1–4–1969)
நாகரிகம்
மேகங்கள் இல்லையென்றால் மழையே இல்லை
மேலோர்கள் இல்லையென்றால் ஒழுக்க மில்லை.
நாகங்கள் இல்லையென்றால் மகுடி இல்லை.
நாகரிகம் இல்லையென்றால் பெருமை இல்லை.