இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
37
சாதிமதம்
மதமெல்லாம் பகுத்தறிவு வளர்ந்தால் ஓடும்
மதிபொங்கப் பொங்கவெறி மதங்கள் மங்கும்!
–நூல் : தேன்மழை
கிளர்ச்சி இல்லாவிடில் வளர்ச்சி பிறக்காது–புதுமைக்
கருத்து இல்லாக்கவிதை அதிகநாள் இருக்காது!
மொழி உணர்வில்லாமல் இனஉணர்வே வராது–சாதி
மதம் வளர்க்கும் நாடு முன்னேற்றமே தராது.
–இதழ் : ‘மாலைமணி’
நிறத்தாலே பிறப்பாலே சிறந்தோர் என்று
நினைப்பவரெல் லாங்கடையர் மடையர்...
✽✽✽
நன்மைக்கு, நம்செயலைப் பிறந்த நாட்டின்
நலம்வேண்டி நம்மூச்சைத் தருதல் வேண்டும்.
குன்றைப்போல் தடைசெய்யும், சாதி பேதக்
கொடுமையிலாச் சமுதாயம் அமைத்தல் வேண்டும்.
✽✽✽