இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
41
வரலாறு
இறப்பதுவும் பிறப்பதுவும் வையந் தன்னில்
எல்லோர்க்கும் பொதுநிகழ்ச்சி; மனிதன் வாழ்வில்
திறமைகள்தான் உண்மைவர லாறு ஆகும்.
தொழில்வளம்
நெல்தரும் வயலில் சென்று
நெடுநேரம் உழைக்கும் நாமோ,
செல்வத்தைப் பெருக்கு கின்ற
தொழில்பல செய்தல் வேண்டும்.
✽✽✽
இல்வளம் சுகத்தைக் காக்கும்
இசைவளம் பாட்டைக் காக்கும்
சொல்வளம் மொழியைக் காக்கும்
தொழில்வளம் நாட்டைக் காக்கும்
✽✽✽
பைந்தமிழ்ச் சொல்லின் விளக்கம் – தமிழ்ப்
பண்ணியல்; மண்ணியல் நுட்பம்
யந்திர வித்தை விளக்கம் –இவை
யாவும் நமக்கிங்கு வேண்டும்.
✽✽✽