பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சுரதா கவிதைகள்

கல்வி

கற்பு புகழ்தரும், காதல் சுகந்தரும் - கல்வியால் அறிவு நயப்படும் வெட்டும் கத்திக்குக் கத்தித்தான் பயப்படும்.

事 岑 கருவில் இருக்கும்போது சாதி மதம் ஏது? கல்வியைப் போல் உலகில் அழியாத பொருள் ஏது?

-இதழ்: ஊர்வலம் (15.5-63)

தாமரைப் பூவில் மதுவதிகம்

தனித்தமிழ்ச் சொல்லில் சுவையதிகம் பாமரர் நெஞ்சில் இருளதிகம்

படித்தவர் நெஞ்சில் தெளிவதிகம்

-நூல் : தேன்.மழை

{}

வீரம்

வெளிச்சத்தின் மரணத்தை இருளென் பார்கள் வீரத்தின் விளைவுகளை மறமென் பார்கள்.