பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56.

சுரதா கவிதைகள்

மற்றாரை யார்மிஞ்சக் கூடு மென்றால்
மதிநுட்பம்மிக்கோன்தான். -

(43.1973-ல்பண்ணுருட்டி பாராட்டுவிழாவில்)

புதுமை

தானியங்கள் முளைக்காமல் போவ தில்லை!
தனித்திறமைப் புதுமைகளும் சாவ தில்லை!


புதுமைதான் புகழின் கோடு:
புதுமைதான் வளரும் வாழ்க்கை;
புதுமைதான் உணர்வைத் துண்டும்:
புதுமைதான் பாட்டில் வேண்டும்.


புதுமையே அறிவின் ஆக்கம்
புதுமையே புகழுண் டாக்கும் புதுமையே தலைமை தாங்கும்
புதுமையே நிலைத்து நிற்கும்

- நூல்: தேன்.மழை


செயல்

ஒருசிலர் எல்லாம் செய்வர்
செய்வதை ஒழுங்காய்ச் செய்யார்