பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ડ8 சுரதா கவிதைகள்

கருங்கடல் மீது கலத்தைச் செலுத்துவோர் கலவர். அதாவது கப்ப லோட்டிக்ள் எண்ணத்தில் புதுமையை இழுத்துக் கட்டுவோர் புலவர். அதாவது புகழுக் குரியவர்

பூவின் வியர்வையே தேனாம் தினம் போரிடும் உன்விழி மீனாம்: பூவையே! பொப்புகழ் சாகும்-மலை பூமியின் கொப்புள மாகும்:

-இதழ். சுரதா (15-7-1968)

கல்லைவைத்தும் கருங்கடலின் நீரை வைத்தும்

கற்றறிந்தார் தமிழ்நாட்டுக் கெல்லை வைத்தார். சொல்லைவைத்தும் சொல்குறிக்கும் பொருளை

வைத்தும் தொல்புலவர் பொய்யாத புகழை வைத்தார்

- நூல்:தேன்.மழை

ஒளியென்றால் வாழ்ந்துவரும் காலந் தன்னில்

உண்டாகும் செல்வாக்கை குறிக்கும். மேலும், தெளிவாகச் சொல்வதெனில் புகழ்மட் டுந்தான்

சிரஞ்சீவியாயிருக்கும்.....

-இதழ்: தென்னகம் (3-6-1971)