பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சுரதா கவிதைகள்

நீரிருந்தால் அந்நீரில் நுரையி ருக்கும்

நிழலிருந்தால் அந்நிழலில் குளிரி ருக்கும். தேரிருந்தால் சக்கரங்கள் இருக்கு மென்றான்.

சிறப்பிருந்தால் புகழிருக்கும் என்று சொன்னான்

- (1974.பொங்கல்மலர்)

வினையெச்சம் பெயரெச்சம் என்பர் வாழ்வில் வேறெச்சம் ஒன்றுளதாம்! அஃது காமப் பணியெச்சம் என்கின்ற குழந்தை யன்று: பாரிலது புகழென்னும் எச்ச மாகும்:

-இதழ்: சுரதா(அண்ணாமலர்)

கற்பவை கற்றால் திறமை வரும் செல்வம் திரண்டால் செழிப்பு வரும்

திறமை மிகுந்தால் புகழ்வளரும்

"நீ விரிக்கும் விரிப்பென்ன? என்று கேட்டான்

"நீள் குழலைப் பாயாக விரிப்பேன்" என்றாள். பூவிரிக்க மறப்பதில்லை மரங்கள்" என்றான்

"புகழ்விரிக்க முடிவதில்லை. சிலரால்" என்றாள். - -போபால்தமிழ்ச்சங்கம் - சிறப்புமலர்(1966-67)