இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
69
ஆசை
இருட்பார்வை நமக்குண்டு–நமக்கு
எதிலும் ஆசையுண்டு.
அருட்பார்வை துறவிகளின்–நெஞ்சில்
ஆசை இருப்பதில்லை
ஓசையிலே உருப்பெற்ற தாகக் கூறும்
உலகத்தில் உறவாடும் மக்கள் வாழ்க்கை
ஆசையிலே ஆரம்பம்! இன்ப துன்பம்
அத்தனைக்கும் நாம் கட்டுப் பட்ட மக்கள்
–‘மணிப்புறா’ என்னும் நூலுக்கு எழுதிய
அணிந்துரை.
ஏக்கம்
மூதறிஞர் முதுமொழிகள் முத்திரைப்பொன்னாகும்,
மொழியுணர்ச்சி ஓரினத்தின் முதலுணர்ச்சி யாகும்,
நீதி நெறி விளக்கமெல்லாம் அனுபவங்க ளாகும்,
நிறைவேறா எண்ணமெலாம் ஏக்கங்க ளாகும்.
–நூல் : துறைமுகம்