பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

என்று மனமாரப் பலர் முன்னிலையில்

பாராட்டினார்.

நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுப்போட்டையிலிருந்து வெளி வந்த தலைவன்" இதழில் துணை ஆசிரிய ராகப் பணியாற்றிய உவமைக் கவிஞர். அதில் தொடர்ந்து சிறு கதைகள், கவிதைகள் எழுதி வந்தார்.

புகழ்பெற்ற கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் நடத்தி வந்த "சிவாஜி" பத்திரிகையில் ஆரம்ப காலத்தில் உவமைக் கவிஞரின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.

திருச்சி வானொலி நிலையத்தில் ஒளிபரப் பான உவமைக் கவிஞரின் பல நாடகங் களில் ஒன்றான 'சுஜாதா நாடகத்தை கேட்ட பல பெரியவர்கள் பாராட்டினர். கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி இவரை திரையுலகத்தின ருக்கு அறிமுகப்படுத்தி திரைத்துறையில் இணைத்து வைத்தார்.

1944-ல் மங்கையர்க்கரசி" என்ற திரைப்படம் தயாரானது. உவமைக் கவிஞர் முதன்முதலில் திரைப்படத்திற்கு உரையாடல் தீட்டியபடம் இதுதான். திரையுலக வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் திரைப்படத்திற்கு உரை யாடல் எழதியவரும் நமது உவமைக் கவிஞரே.