பக்கம்:சுலபா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 óᏐᏮytᏗfr

கனவிலுள்ள பரிசுத்தமான ஆணழகு எது என்பதைக் கோகிலா அநுமானமாகவும், பேரளவு சரியாகவும் புரிந்து கொண்டிருந் தாள். இது அவளுக்கு நினைவிருந்தது.

கோகிலா பார்ட்டி முடிந்து வீடு திரும்பும் போது இரவு ஒருமணி. "கவலைப்படாதே! உன்னைத் தயாராக்கிக் கொள்! கடன் இருபத்தெட்டாவது பிறந்த நாளன்று கஜாரன்ய யோகி மாதிரி ஒருவரிடம் உ ைனைத் தனியே கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பி விடுவேன் என்று நம்பிக்கையாக இரு! உனக்கு அப்படி ஒரு தனிமையில் அப்படி ஒரு பேரழகுடன் பன்னிரண்டு மணி நேரம் தங்க ஏற்பாடு செய்து விடுகிறேன். அதன் பின் உன் சாமர்த்தியம், பாதாம் அல்வாவை பிளேம் டில் முளுைல் வைத்து விடுகிறேன். சாப்பிடுவதும், ருசிப்பதும் ருசிககாததும், பயன்படுத்திக் கொள்வதும் பயன்படுத்தாமல் போவதும் எல்லாம் உன் பாடு, விஷ் யூ குட்லக்' என்று உற்சாகமாக வாக்குறுதி யளித்து விடை பெற்ற கோகிலா விடம் விவரமாக எல்லாம் சொல்லுமாறு தூண்டித் துருவிள்ை சுலப்ா, “உரிய சமயத்தில் எங்கே எப்படி யார் என்பதெல்லாம் கூறப்படும்' என்று பூடகமாகப் பதில் கூறிவிட்டுப் போய்ச் சேர்ந்தாள் கோகிலா. சுலபாவின் இருபத்தெட்டாவது பிறந்த நாள் வர இன்னும் மூன்றே நாட்கள் தான் இருந்தன. அது ஒரு வெள்ளிக்கிழமையாகப் பார்த்து வந்தது. பிறந்தநாள் என்பதே கோகிலாவுக்கு மட்டும் தான் தெரிவிக்கப் பட்டிருந் தது.

சொந்த விஷயமாகக் கோகிலசவும் நானும் சில காரியங் கள் கவனிக்க வேண்டியிருக்கு. வர்ர வியாழன், வெள்ளி, சனி மூணு நாளும் ஃபரீயா வை' என்று கவிதாவிடம் சொல்லி விட்டாள் சுலபா அவளும் குறித்துக் கொண்டாயிற்று.

தான் பிறந்த பிறவிலேயே மிச்சமிருக்கும் ஒரே ஆனந்தம் என்று சுலபா நினைத்த வெள்ளிக்கு முன்பாக ஒரு நாளும், பின்பாக ஒரு நாளும் சேர்த்தே சொல்லியிருந்தாள், !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/106&oldid=565774" இலிருந்து மீள்விக்கப்பட்டது