பக்கம்:சுலபா.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 145

அதே கதிதான். தானோ, பார்கவியோ குப்தா தம்பதிகளுடன் கட்டாயமாக உடன் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இப்போது ஆடிட்டர் உணர்ந்தார், பார்கவியைக்கூப்பிட்டு அவள், அவளுடைய அம்மா, குப்தா தம்பதிகள் நால்வரையும் விட்டு முன்ஹாலில் உட்கார வைத்துவிட்டு சிவவடிவேலுவை அழைத்துக் கொண்டு பங்களா முகப்பில் இருந்த தோட்டத் துக்கு ஆடிட்டர் வந்தார்.

'அவன் இங்கே தங்க மாட்டாளும், பார்கவியிலே தங்கில்ைதான் அதன் பிரச்சினைகளை ஸ்டிடி பண்ண முடியு yomrib.”

அடி ஆத்தாடி! அங்கே சரிப்பட்டு வராதே. இங்கே தங்கிக்கிட்டுப் போய்க் கவனிக்கட்டுமே?”

'இல்லே! அவன் அப்படிச் செய்ய ஒத்துக்க மாட்டிான்னு தோணுது. அங்கேயே மாடியில் நல்ல டிபிள் பெட் ரூம் பார்த்து ஒண்ணு குடுத்துடுங்க”

சிவவடிவேலு கையைப் பிசைந்தார். அவர் முகத்தில் பதற்றம் தெரிந்தது. வியர்த்தது.

"அப்ப ஒன்னு செய்யலாம். இவங்க இங்கயே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கட்டும். அதுக்குள்ள நாம ரெண்டு பேரும் போயி ஒரு ருமை ஒழுங்கு பண்ணிட்டு வந்திருவோம்" என்ருர் சிவவடிவேலு. \,

அவர் பதறுவதிலிருந்து பார்கவியில் குப்தா தங்குவதற்கு ஏற்ற தரத்தில் ரூம்கள் எதுவும் இராது என்று புரிந்தது. திறப்பு விழாவுக்குப் பின் ஆடிட்டர் இரண்டு வஷருங்களாக அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. சிவவடிவேலு கொடுத்த கணக்கு வழக்கு விவரங்கள் சிட்டிைகள், டிேபுக், லெட்ஜர்களிலிருந்து பேலன் வீம் போட்டுக் கொடுத்ததோடு சரி. - . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/147&oldid=565815" இலிருந்து மீள்விக்கப்பட்டது