பக்கம்:சுலபா.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பார்கவி

கண்டுபிடிப்பும், உங்களோட ஆப்ஸர்வேஷனும் ஏறக்குறைய ஒத்து வருது; அதனாலே உங்க முழு யோசனையையும் கேட்டுட லாம்னு பார்க்கிறேன், மிஸ்டர் குமரேசன்! நீங்க பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிக்கலேன்னுலும் நடைமுறை ஞானத்தி லேயே கரெக்டாச் சொல்றீங்க. ரைட் பெர்ஸ்னஸ் ஃபார் ரைட் ஜகப். ராங் பெர்ஸனல் ஃபார் ராங் ஜாப் என்று இரண்டு தலைப்புக்களில் என்ன வருமோ அதை இதுவரை அழகாகச் சொல்லிட்டீங்க' என்று குப்தாவே குமரேசனைப் புகழ்ந்தான்.

குமரேசன் தயங்கித் தயங்கிப் பெரிய பீடிகையோடு ஆரம்பித்தான். 'இதோ இந்த ஆடிட்டர் சார் இருக்கார்! எங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர். நான் சொல்றதை அவரும் நீங்களும் நல்ல லென்ஸிலே எடுத்துக்கணும். இப்பவே சொத்தைக் கைப்பற்ற ஆசைப்படறேன்னு சீப் மோடிவ் கற்பிச்சு என் நோக்கத்தைத் தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது.” - - ?

"ரிஸர்வேஷன் எதுவும் வேண்டாம். நினைக்கிறதை அப்படியே சொல்லுங்க. எனக்கு அதுதான் வேணும்.'"

'முரண்டுக்கிறது மோசமான குணம். முரண்டோட அறியாமையும் சேர்ந்துட்டிாக் கேட்கவே வேண்டாம். அது வைக்கோல் போரில் நெருப்பிப் பொறி விழுகிற ம்ாதிரி, எங்கப்பா கிட்டே இது ரெண்டுமே கணிசமா இருக்குது. 'கொண்டது விடாமை" என்கிற குணம் மனுஷனுக்கு இருக்கக் கூடாது. குரங்கு முதலை மாதிரிக் கவ்விப் பிடிக்கிற விலங்குகள் கொண்டதை விடாமல் பறிக்கலாம். ஆளுல் மனுஷனுக்கு அது கூடாது. விலங்குக் குணம் மனுஷன் கிட்டே இருந்தால் அது ஆபத்தா முடியும். அறிவு வளர வளரப் பழசை விடனும், புதுசை ஏத்துக்கணும். பழசை விடறதுக்கும் புதுசை ஏற்றுக் கொள்வதற்கும் எங்கப்பா துணியமாட்டார். இதுனுலேதான் இப்ப எங்க ஃபேமிலியே கஷ்டிப்பட்டுக்கிட்டு இருக்குது. இத்தனை வசதியிருந்தும் எங்கண்ணன் டில்லியிலே வாடிகைவிட்டிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/166&oldid=565834" இலிருந்து மீள்விக்கப்பட்டது