பக்கம்:சுலபா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சுலபா

அதனுல்தான் சுலபா சிரித்ததுமே கவிதா யோசித்தாள், சிரித்ததோடு நின்றுவிடாமல் சுலபாவே பதிலும் சொல்ஞள்:

'வெளி நாட்டுக்குப் போயிட்டுவான்னு நீங்க சுலபமாச் சொல்லிட்டிங்க ஆடிட்டர் சார்! கையிலே இருக்கிற ஷெட் யூலை' எல்லாம் முடிச்சுக் குடுக்காமல் நான் கிளம்பில்ை இந்தப் புரொட்யூஸர்ஸ் என்னைப் போக விட்டுருவாங்கன்ன நெனைக்கிறீங்க...?' - :

அவங்க விடருங்களா, இல்லியாங்கிறது முக்கிய மில்லேம்மா! நாம போகணும்னு நினைக்கிறமா இல்லியாங் கிறதுதான் முக்கியம். புரொடக்ஷன் வேலை நடந்துக்கிட்டி ருக்கிறப்பவே நடுவிலே உன் உடம்புக்குச்சுகமில்லாமப் போன என்ன பண்ணுவே? - .

உடிம்புக்குச் சுகமில்லாமே ஒய்வு எடுத்துக்கிறேன்னு சொல்றதும் உல்லாசப் பயணம் போறேன்னு சொல்றதும் ஒண்ணுயிடுமா?" - -

"நீ சொல்றது நியாயந்தான் சுலபா ! உடம்புக்குச் சுகமில்லேன்ன அவங்களே மேற்கொண்டு எதுவும் கேட்காமே விட்டுடுவாங்க... ஃபாரின் ட்ரிப் போறேன்ன அப்பிடி விட, மாட்டாங்க...'

அவனவன் கோடிக் கணக்கிலே இன்வெஸ்ட் பண். னிட்டுக் காத்திருக்கான், என்னிக்கிடா புரொடக்ஷனை முடிச்சு, ரிலீஸ் டேட்போட்டு விளம்பரம் பண்ணலாம்னு காத்துக்கிட்டிருக்கிறப்ப நீங்க திடுதிப்னு ஃபாரின் போறேன்ன எப்பிடி இருக்கும்? முன்பணம் குடுத்திட்டு வெயிட் பண்ற, டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வேற பிடுங்கித் தின்னுடுவாங்க...இதெல் லாம் நாமே கொஞ்சம் யோசனை பண்ண முடியுமே?"

"நீ சொல்றதெல்லாம் நூத்துக்குநூறு சரிதான்! அலை

ஓய்ந்து நீராட முடியாது. இத்தனைக்கும் நடுவிலே என்ன வாவது சாக்குப் போக்குச் சொல்லிப் பிரயாணம் போயிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/20&oldid=565688" இலிருந்து மீள்விக்கப்பட்டது