பக்கம்:சுலபா.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

or.taff. 203

"அதுக்காக இவங்க போட்டோவைப் பேப்பர்லே போட்டு "இது மாதிரிப் பலான பொண்ணுங்கள்ளாம் இருக்கு! எங்க ஒட்டல்லே வந்து சாப்பிடுங்க.."என்னு கூப்பிடறது நல்லா இருக்குமா?"

"நீதான் இப்போ அந்த மூங்கில் முறிச்சான்பாளையத்து ஆள் பேசின மாதிரிப் பேசறே குமரேசன்! ஒரு கெட்டிக்கார மனுஷன் உபயோகப்படுத்தற லாங்வேஜோட தரத்தை வச்சு எதையும் டீஸன்டாப் பண்ணிட முடியும். கெட்டிக்காரத் தனம் இல்லாதவன் அதையே இன்டிஸென்டாகவும் பண்ணிடி முடியும். இப்ப நான் பேப்பர்ல குடுக்கப் போற மாதிரி விளம் பரத்தை எழுதித் தர்றேன். பார்த்திட்டு அப்புறம் பேசு.'

குப்தா டிராஃப்டை ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்தான்.

"நாட் ஜஸ்ட் ஒன் நியூ பார்கவி; ஃபைவ் யங் ப்யூட்டி ஃபுல், ஸ்மார்ட் பார்கவில் (ஃப்ரம் கோட்டயம் விமன்ஸ் கேட்டரிங் டெக்னலஜி இன்ஸ்டிட்யூட்) ஆர் வெயிட்டிங் அண்ட் எக்ஸ்பெக்டிங்-கஸ்டமர்ஸ் லைக் யூ அட் ஒட்டல் நியூ பார்கவி.

"இந்த வாசகங்களுக்கு மேலே அவங்க அஞ்சு பேர் படத்தையும் அதுக்கும் மேலே விளம்பரத்தோட டாப்லே ஒட்டல் நியூ யார்கவி முகப்பையும் சுபமங்களம் ஏ. சி. ரெஸ்டிா ரெண்ட் முகப்பையும் போட்டுடிறோம்." - -

குமரேசன் குப்தாவின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந் தான். விளம்பரம் நாசூக்காகவும் கவர்ச்சியாகவும் எழுதப் பட்டிருந்தது. அதே சமயம் இன்ஸ்டிட்யூட்டின் பெயரும் வந்தது.

சும்மா ஒரு வம்புக்காக அவன் குப்தாவைக் கிண்டல் செய்தான். 'மிஸஸ் குப்தா வேற பக்கத்திலே இல்லே. சிம்லாவுக்குப் போயிருக்காங்க, அந்த கேட்டரிங் பொண்ணுங்க கிட்டி ரொம்பத்தான் மயங்கிப் போயிருக்கிங்கன்னு தெரியுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/205&oldid=565873" இலிருந்து மீள்விக்கப்பட்டது