பக்கம்:சுலபா.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 umrfsefi

அரைவல், மதுரை அரைவல் விவரங்களைப் பின்பு தெரிவிப்பு தாகவும் மாதவி டுர்ஸ் அண்ட் டிராவல்ஸ் பிரைவேட் லிமி டெட்டிலிருந்து ஆடிட்டருக்கு ஒரு கடிதம் கிடைத்தது.

சவுத் ஈஸ்ட்டிலிருந்து வருவதாயிருந்தால் பம்பாய் போகாமல் நேராகச் சென்னையிலேயே லேன்டிங் ஆகிற மாதிரி பிளைட் இருக்கலாம் என்று ஆடிட்டர் திரும்ப அவர்களுக்கு எழுதினர். . s - ... . "அது அவர் திரும்புகிற விமானக் கம்பெனியைப் பொறுத்தது. மணிலா டு துபாய் அண்ட் துபாய் டு பம்பாய் என்று ஒரு பிளைட் இருக்கிறது. அவர் மணிலா சிங்கப்பூரி எங்கிருந்து புறப்பட்டாலும் பம்பாய்-சென்னை எங்கு வேண்டு மாலுைம் வத்து இறங்கலாம். கடைசி போர்டிங் பாயிண்ட் வந்ததும் அதுபற்றி மறுபடி எழுதுகிருேம் என்று டிராவல் ஏஜென்டிடமிருத்து பதில் கிடைத்தது. r 'ஏப்ரலில் நீ டில்லி புறப்பட்டு வா; நாம் சிம்லா போகலாம்' என்று பார்கவிக்குச் சுஷ்மா குப்தா கடிதம் போட்டிருந்தாள். -

அவள் கடிதத்தை அண்ணன் தண்டபாணியிடம் காட்டி விமான டிக்கெட் எடுத்துத் தரும்படிக் கேட்டாள்.தண்டபாணி சிரித்தான், -

"இப்போ மார்ச் கடைசி வாரம். இங்கே 'நியூ பார்கவி அனெக்ஸ் கட்டறது சம்பந்தமாக முக்கிய மீட்டிங் இருக்கு. குப்தா அவன் மனைவி, அஜித், எல்லாருமே குருபுரம் வராங்க. நீயும் இங்கே இருந்தாகனும், ஏப்ரல்லேயே அப்பா ஊர் திரும்புகிருர்.அவர் முதல்லே மெட்ராஸ்லே இறங்குகிற மாதிரி ஃபிளைட்டில் வருகிருரா, பம்பாயில் இறங்குகிற மாதிரி ஃபிளைட்டில் வருகிருரா என்று இன்னும் உறுதியாகவில்லை. அவரை ரிலீவ் பண்ண நீயும் இருக்கணும்! இப்போ சிம்லா வில் போய் என்ன பண்ணப் போறே? கோடையிலே குருபுரமே சிம்லாவை விடப் பிரமாதமாக இருக்குன்னு சிம்லாக்காரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/220&oldid=565888" இலிருந்து மீள்விக்கப்பட்டது