பக்கம்:சுலபா.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 grர்கவி

'பாஷையைக் கடந்த உறவு இது. இதுலே பாஷைப் பிரச்சினை வரவே வராது. தமிழ்நாட்டுச் சித்திரங்கதையை வடநாட்டு அருச்சனன் இதிகாச காலத்திலேயே காதலிச்சிருக் கான், அதிலே பாஷைப் பிரச்சினை வரலே. அந்தக் காதல் வெற்றியடைந்திருப்பது இன்று காவியங்களிலேயே பொறிக் கப்பட்டிருக்கிறது,' என்று குமரேசன் பிரசங்கத்தில் இறங்கிய போது

"எ பாயின்ட் ஆஃப் ஆர்டர் குமரேசன்! இப்போ நாம பார்கவியோடி பார்ட்னர்ஷிப் பற்றிப் பேசிக்கிட்டிருக்கோம், வேற எதையும் பற்றிப் பேசலே, ஞாபகமிருக்கட்டும்."

"ஆமாம் நானும் பார்கவியோடி பார்ட்னர்ஷிப் பற்றித் தான் பேசிக்கிட்டிருக்கேன். கத்தரிக்காய் வெலையைப் பற்றிப் (ఃuతా&ు.”

"ஐ மீன் ஒட்டில் நியூ பார்கவி' என்று குப்தா புன்னகை புரித்தான். நியூ பார்கவி என்றதும் குமரேசன் சுதாரித்துக் கொண்டு பின் வாங்கினன்.

நீ பட்டி மன்றங்களிலே பேசறதை விட்டிப்புறம் எதிர்க் கட்சியை அடிக்கணும்கிற மனப்பான்மையும் தலைவர் மணி படிச்சப்புறமும் விடாமப் பேசிக்கிட்டிருக்கிற பழக்கமும் உன்னைவிட்டுப் போகலே' என்ருர் ஆடிட்டர்.

"எங்கப்பா வந்தப்புறம் நிறைய கட்சி பேசனும்கிற ஆர்வத்திலே பழக்கம் விட்டுப்போகாமல் காப்பாத்திக்கிட்டிருக் கேன் சார்!’ -

"அதுக்கெல்லாம் அவசியமே இராது. பார்கவியின்

வளர்ச்சியைப் பார்த்துக் குருபுரமே வியந்து போயிருக்கு. உங்கப்பர் அப்படியே மலைச்சுப் போயிடுவார்! எதிர்த்துப் பேச ஒன்னுமே இராது" -

"நீங்க நினைக்கிறீங்க, அவருக்குப் புதுமைன்னலே அலர்ஜி, பார்கவியைப் புதுசா மாத்திப்பிட்டோம்கறதே அவருக்குப் பிடிக்காது." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/224&oldid=565892" இலிருந்து மீள்விக்கப்பட்டது