பக்கம்:சுலபா.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 231

மீட்டிங் முடிஞ்சதுமே நியூ பார்கவி அனெக்ஸ் உறுதியா யிடுது. அஜீத் பார்கவியோட பார்ட்னர் ஆயிடருண். தேவ சேன குமரேசனை ப்ரேக் ஃபாஸ்ட்டுக்குக் கூப்பிடற அளவு முன்னேறியாச்சு, லஞ்சுக்கும். டிவினருக்கும் அப்புறம் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலோடு...துங்கறதுக்கும் அவள் அவனைக் கூப்பிட அதிக நாள் ஆகாது." -

"ஸ்டாப் இந்த இடத்திலேயே சென்ஸார் பண்ணிடுங்க அதுக்கப்புறம் உள்ளது எல்லாம் அவங்க சொந்த விஷயம்."

இதைக் கேட்டு ஆடிட்டர் சிரித்தார்.

'இதிலே ஒரு வேடிக்கை மிஸ்டர் குப்தா. குமரேசன்கிறது முருகக் கடவுளுடைய பெயர். புராணங்களிலேயே முருகக் கடவுளின் ஒரு மனைவிக்குத் தேவசேன்ைனுதான் பெயர்."

"இள்ளுெருத்திக்கு பெயர்?'

"வள்ளிம்பாங்க."

'குமரேசன் தேவசேனவோடி மட்டும் நிப்பான? அல்லது ஒரு வள்ளியையும் தேடிப்பான?"

"இந்தத் தேவசேன கெட்டிக்காரி எந்த வள்ளியையும் குமரேசன்கிட்ட நெருங்க விடமாட்டாள். தவிர இதிகாசத் தலைவர்களில் சிறந்தவர் அர்ச்சுனன. இராமகுங்கிற பட்டி மன்றங்களில் எப்பவும் இராமன் கட்சியையே பேசியிருக்கிறான் குமரேசன்." . . .

"அது ஜெயிக்கிற கட்சிங்கறதால் அதைப் பேசியிருப் பான், குமரேசனுக்கு எப்போதும் தோற்கிற கட்சியைப் பிடிக் காது மிஸ்டர் அனந்த்!"

‘'எதுக்கும் டு பீ ஆன் த லேஃப் லைம். இந்தத் தேவசேனவோட ஃபேமிலி பேக்ரவுண்ட் முதலிய டி.டயில்ஸ் விசாரிச்சு வைக்கணும். இல்லாட்டி சிவவடிவேலு கூப்பாடு போடுவாரு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/233&oldid=565901" இலிருந்து மீள்விக்கப்பட்டது