பக்கம்:சுலபா.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 பாசிகவி

'அடடே! நீ சொல்றதைப் பார்த்தாப் பாரதியார் உனக்கு வசதியாகவே எல்லாம் சொல்லிட்டுப் போயிருக் கிருர்னு தெரியுது.'

குமரேசன் ஆடிட்டரை நோக்கி "ஆம்" என்பது போல் தலையை அசைத்தான்,

1 இ

'ஏப்ரல் முதல் வாாம் திரும்புவார்-என்று சிவவடி வேலு தம்பதிகள் பற்றி மறுபடி டிெலக்ஸ் கிடைத்தது. குப்தாவும், ஆடிட்டரும் சித்திரை பிறந்து ஏப்ரல் பதினறில் ஒரு முகூர்த்தம் பார்த்து அஜீத்-பார்கவி, குமரேசன்தேவசேன திருமணத்திற்கு ரகசியமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

ஏப்ரல் முதல் வாரமே சிவவடிவேலு தம்பதி திரும்பினல் கல்யாண ஏற்பாடுகளில் ஏதாவது குழப்பமாகலாம் என்று

பயம் இருந்தது.

எங்கப்பா இங்கே ஏப்ரல் பிறந்ததுமே வந்துடாமே சிங்கப் பூரிலியோ, கோலாலம்பூரிலேயோ பத்துநாள் டுர் புரோக்ராமை நீட்டச் சொல்லுங்க. மாதவி டுர்காரன்தான் உங்க நெருங்கின தோஸ்த் ஆச்சே? இப்படி அப்பா, அம்மாவை மட்டும் லாஸ்ட் போர்டிங் பாயிண்டிலே அதிக நாள் நீட்டிக்கிறதுளுலே அடிஷனல் செலவு ஆளுக்கூடிப் பரவாயில்லே. இங்கே வந்தார்ன ஏதாச்சும் நம்மை ஏப்ரல் ஃபூல் பண்ணிடுவாரு... ஜாக்கிரதை. எல்லா ஏற்பாடுமே எகிறிப்போயிரும்,' என்று குமரேசன் ஆடிட்டிரை எச்சரித்தான்.

சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் அது சரியான யோசனை யாகவே பட்டது. செலவுகூட ஆகுமென்று தெரிந்தால் சிவவடிவேலு உயிரையே விட்டுவிடுவார். பந்துநாள் நீட்டித்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/240&oldid=565908" இலிருந்து மீள்விக்கப்பட்டது