பக்கம்:சுலபா.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jor.tar. 239

தங்க வைக்க என்ன செய்வதென்று யோசனை செய்தார்கள். அதற்கும் குமரேசனே ஒரு வழி கூறினன்:

"என்ன யோசிக்கிறீங்க? கிரகங்கள், தசா புத்திகள் லாம் பின்னே எதுக்காக இருக்குங்கிறேன்! கடுக்கையூசிக் கண்ணபிரான் ஜோசியர் தலையிலே பழியைப் போடுங்க. அவரைக் கூப்பிட்டுத் தசா புத்தி சரியாகாததாலே ஏப்ரல் பதினைந்தாம் தேதி இரவு சிங்கப்பூர்லே ஃப்ளைட் பிடிச்சுப் பதிருைந் தேதி காலையில் இங்கே வர்ற மாதிரிப் புறப்படிச் சொல்லி அவர் கையெழுத்தோடவே ஒரு கேபிள் அல்லது டெலக்ஸ் குடுக்க ஏற்பாடு பண்ணுங்க."

"கடுக்கையூர் என்ன കെr്ളഖr്..."

'நூறு ரூபாய் தட்சினை வையுங்க. தசா புத்தி கிரகம் சனி,குரு, ராகு, கேது எல்லாமே அப்பாலே நாம சொல்றபடியே கேக்க வச்சிடுவாரு."

உடனே கடுக்கையூராரை வரவழைத்து அவர் சொல்வ தாக அதே பாணியில் கேபிள் கொடுத்தார்கள். அப்படியே அரேன்ஞ் செய்வதாக மறுநாள் பதிலும் கிடைத்து விட்டது. எல்லாரும் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். ஆடிட்டர் குமரேசனிடம் சொன்னர்: -

'நீ உங்கப்பாவைப் பத்தி அதிகமா ஒர்ரி பண்ணிக்கிறே குமரேசா! நான் பந்தயம் வேணும்னப் போடறேன். அவர் பழைய கஞ்சத்தனம், கன் ஸர்வேடிஸம், குறுகிய மனப் பான்மை எல்லாத்தையும் விட்டுவிட்டுப் புது மனுஷளு மனசு விசாலமடிைஞ்சுதான் திரும்பி வரப்போருரு.'

"எப்படி அத்தனை உறுதியாகச் சொல்lங்க! ஏதாச்சும், அடையாளம் இருக்கா?"

'அடையாளம்லாம் ஒண்ணுமில்லே! பிரயாணமும் புது இடமும் புது மனிதர்களும் எப்படிப்பட்ட ஆளையும் மாத்திப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/241&oldid=565909" இலிருந்து மீள்விக்கப்பட்டது