பக்கம்:சுலபா.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240: ாசர்கவி

பிடும்ங்கற உலக நியதியை வச்சு அனுமானம் பண்ணித்தான் சொல்றேன்."

"எங்கப்பா விஷயத்திலே உங்க அனுமானம் சரியா ஒத்து வராது! நீருட்கிடப்பினும் கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாகும்’னு ஒரு பழைய தமிழ்ப்பாட்டு இருக்கு சார்: அதுக்கு அர்த்தம் ‘கருங்கல் எத்தனை யுகமாகத் தண்ணிருக்குள் ஊறிஞலும் அதனுல் சிறிதும் கரைந்து போய் விடாது" என்பது. எங்கப்பா மனசும் அந்தக் கருங்கல் மாதிரிதான்.

"அவர் உன்னைச் சோம்பேறி, தறுதலைன்னெல்லாம் திட்டிப்பிட்டாருங்கிறதுளுலே நீ அவர் மேலேயும் கரும்பாயிரத் தும் மேலேயும் ரொம்ப பிரெஜிடிஸ் ஆகியிருக்கே. அதுதான் உன்ளுேட கோபத்துக்குக் காரணம் குமரேசன்'

'கோபமாவது ஒண்ணுவது? எனக்கு அவர் மேலே இருக்கிறதெல்லாம் வெறும் பரிதாபம்தான் சார். கோபப் படறது வேறே. தேருத கேஸ்னு பரிதாபப்படறது வேறே.'

"அதெல்லாம் உனக்கு இருக்கிற வீண் பிரமை குமரேசன்! ரொம்பப் பெருந்தன்மையா உங்களை எல்லாம் ஆசீர்வாதம் பண்ணிட்டுப் பிஸினஸை எல்லாம் உங்கிட்டவும், தண்டபாணி கிட்டவும் ஒப்படைச்சிட்டு ஹாயாக ரிட்டயாட் ஆகிடப் போருரு அவரு.” -

'ஒதுங்கறது வேற, ஒதுக்கப்படறது வேற. துறக்கிறது வேற, துறக்க வைக்கப்படறது வேற. கிளவரான ஏற்பாடு மூலம் நாமே அவரை ஒதுக்கியாச்சு. இனிமே ஒதுங்கறது முடியாத காரியம். இப்பப் பந்தயம் நமக்குள்ளே அது இல்லே! எங்கப்பா மனமாற்றத்தோடு வருகிருரா இல்லையா என்பதுதான்! அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? கரெக்ட்டிா ஒரு வாக்கியத்திலே சொல்லுங்க."

"கன்டிப்பாக மனமாற்றத்தோடு வருகிருர்னு சொல்கி றேன்." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/242&oldid=565910" இலிருந்து மீள்விக்கப்பட்டது