பக்கம்:சுலபா.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 351

"ஒரு கஷ்டமும் இல்லை. அவருக்கு எதுவும் தெரியாது. பேப்பர் பார்க்க மாட்டிார். உங்களுக்குச் சிரமமாயிருக்குமே. இருந்தாலும் போற வழியிலே ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போயிடலாம்னு கொண்டு போய் என்னன்னு சொல்லாமே அட்சதையைக் கொடுத்துக் காரியத்தை முடிச்சிடலாம்."

விமானம் கீழிறங்கி ஓடுபாதையில் விரைந்து வரும் ஓசை கேட்டது. குப்தாவும், ஆடிட்டிரும் மாலைகளோடு எழுந்தார் கள். ரகசியம் பரம ரகசியம் என்பதால் டிரைவர் கூடக் கிடிை யாது. அனந்தே காரை ஒட்டி வந்திருந்தார். ஆப்பரேஷன் நியு பார்கவி'யை விடக் கஷ்டமான ஒரு வேலையில் அவர்கள் இப்போது இறங்கியிருந்தார்கள். நிலைய அதிகாரியிடிம் அனுமதி பெற்று விமானம் நின்ற இடத்திற்கே கூடிப் போக

முடிந்தது. சிவவடிவேலு தம்பதி இறங்குவதற்கு முன் வேறு யார் யாரோ இறங்கினர்கள். --

கடைசியாகச் சிவவடிவேலுவும் ஆச்சியும் மெதுவாக இறங்கினர்கள். சூட், கோட். கழுத்திலே டிை வட்டிய தோற்றத்தில் விமானத்தின் லேடரில் அவர் ஒவ்வொரு ஸ்டெப்பாக வைத்து இறங்கியபோது நடிைதான் அந்த சூபி கோட்டைக்கு ஒவ்வாத நாட்டுப்புறத்து நடையாக இருந்தது. ஆச்சி நீல நிறக் காஞ்சீபுரம் பட்டுப் புடிைைய அணிந்து எப் போதும் போல் தோன்றின்ை. சிவவடிவேலுவை நோக்கி ஆடிட்டரும், குப்தாவும் படு உற்சாகமாகக் கையை ஆட்டோ ஆட்டென்று ஆட்டினர்கள். அவர் பார்வை எங்கோ பார்க்கத் தோன்றியது. பராக்காக நோக்கியது. திருவிழாவில் காணுமல் போன குழந்தை பெற்ருேரைத் தேடி விழிகளைச் சுழல விட்டுப் பதறுகிற மாதிரி யாரையோ அவர் கண்கள் தேடின. கடைசிப் படியில் இறங்கி ரன்வேயில் தரை மீது காலை வைத்த பின்பு தான் சிவவடிவேலு இவர்கள் இருவரும் மாலையோடு நிற்பதைப் பார்த்தார், ஆச்சி மேலேயே இவர்களையும் இவர் கள் கை அசைப்பதையும் பார்த்தப் பதிலுக்குக் கையசைத்து விட்டாள். சிவவடிவேலு கீழே இறங்கிய பின்பும் அவர் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/253&oldid=565921" இலிருந்து மீள்விக்கப்பட்டது