பக்கம்:சுலபா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 39

வெளிநாடு போய்ப் படப்பிடிப்பு நடித்த வேண்டும் என்ருல் உடனே வெளிநாட்டுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். எல்லாமே நடந்தன. எல்லாமே நினைத்த, படியே நினைத்த விதத்தில் நடக்கிற போதும் மனம் அதே நிலைக்குப் பழகி அதையே எங்கும் எதிர்பார்க்கிறது. எதிர்பார்த்தது, எதிர்பார்க்கும்.

சுலபாவும் இப்போது அந்த நிலைக்கு வந்திருந்தாள். அவள் சொன்னதை அது சாத்தியமில்லை’-என்று யாராவது மறுத்துப் பேசில்ை அவளுக்குக் கோபம் வந்தது. அவள் சொல்கிற எதையும் யாராவது எதிர் நின்று விவாதிக்கவோ, வினவவோ முயன்ருல் கூடப் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை அவளால். ஒருவரிடம் ஆணவம் கொடி கட்டிப் பறப்ப தற்கு இவை எல்லாம் புற அடையாளங்கள் என்ருல் சுலபா விடம் இந்த அடையாளங்கள் வெளிப்படையாகவேத் தென் படத் தொடங்கின. - - ... "

'உன்னை யாரும் யோசனை கேக்கலே! பேசாமே நான் சொல்றதைக் கேளு! எனக்கு எதை எப்படிச் செய்யணும்னு தெரியும்'-என்பன போன்ற வாக்கியங்கள் அவளிடம் அடிக், கடி வெளிப்பட்டன. இப்போது.

கவிதா இதைக் கவனித்தாலும் தனக்கேன் வம்பு என்று பேசாமல் இருந்து விட்டாள். ஒரு படத்தில் ஒரு காட்சியில் அவள் பாடுவதாக நான் ஒரு பயித்தியக்காரி'- என்ற எடுப்பு டன் ஒரு பாடல் இருந்தது. அந்தத் திரைக் கதையில் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் அவள் அப்படிப் பாடுவதுதான் பொருத் தம் என்று ஏற்பாடு செய்து பாடலாசிரியரும் இசையமைப். பாளரும் பலநாள் சிரமப்பட்டு அதை இசையமைத்து முடித்தி ருந்தார்கள். அவளுக்கு அந்தப் பாட்டுத் தன்னுடைய "இமேஜைக் கெடுத்து விடுமோ என்று மனத்திலே பட்டது. அவ்வளவு தான். மெல்ல டைரக்டர் மூலம் அந்தப் பாடலாசிரி யருக்கும் இசையமைப்பாளருக்கும் சொல்லி அனுப்பினள். அது "ஹிட் ஸாங் ஆகப் புகழ் பெறும் என்று நம்பிக்கொண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/41&oldid=565709" இலிருந்து மீள்விக்கப்பட்டது