பக்கம்:சுலபா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சுலபா

'இது தற்காலிகமான கோபம். இன்னும் நீ சந்யாசினி ஆகிடவில்லை. உன்னே ஆசைப்படாத யாராவது எதிர்ப் பட்டால் ஒருவேளை நீ அவன் மேல் ஆசைப்படலாம் சுலபா!'

"என்னைச் சுற்றி அத்தனை நிதானமும் பொறுமையுமுள்ள நிஜமான ஆண்மகன் யாருமே இல்லையடி கோகிலா...'

"இதுவரை நீ சந்நித்த ஆண்களில் யாருமே உனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை என்கிருயா?"

"நிர்ப்பந்திக்கப்பட்டி சந்தோஷங்கள் எல்லாம் நிஜமான சந்தோஷங்கள் ஆவதில்லை."

"யாரும் ஏற்பாடு செய்யாமல்-ஒரு பெண்ணுக்கு ஆணிடமோ, அல்லது ஆணுக்குப் பெண்ணிடமோ ஏற்படுகிற சுயேச்சையான யதேச்சையான உல்லாஸம் என்பதை நீ ருசித்ததே இல்லை என்ரு சொல்கிருய்?"

'குப்பைய ரெட்டி என்கிற படுபாவியிடிம் சிக்கியிரா விட்டால் அந்த உல்லாஸம் எனக்கும் கிடைத்திருக்கலாமோ என்னவோ?’’

காமம் சம்பந்தமான எல்லா அசல் மகிழ்ச்சிகளுமே சுயேச்சையானவை. யதேச்சையானவை. தற்செயலானவை! மழையையும், காற்றையும் போல இயல்பானவை."

"எனக்கு அதை எல்லாம் புரிந்துகொள்ளவே வாய்த்த தில்லை." - -

"தற்செயலாக நம்மேல் வீசும் தென்றலின் ஓர் இழை நிலவின் ஒரு கீற்று, மழையின் ஒரு துளி போன்றது அசலான சந்தோஷம்.' -

நான் உடல்களை நிறையச் சந்தித்திருக்கிறேன்.

சந்தோஷம் என்பது மனசைப் பொறுத்தது இல்லையா?"

"மனசோடு கூடிய உடம்புதான் சந்தோஷம் சுலபா ! உடம்புகள் மூலமாகத்தான் மனசுகளின் சந்தோஷம் உணரப் பட முடியும்' * . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/52&oldid=565720" இலிருந்து மீள்விக்கப்பட்டது