பக்கம்:சுலபா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 51

"மனசால் தவறு என நினைத்தபடியே இரண்டுஉடம்புகள் அசல் சந்தோஷத்தை அறிய முடியாது உணர இயலாது" - "ஒருவரை வெல்கிருேம் என்ற உணர்வோடு அடைகிற மகிழ்ச்சியும் சமமானதில்லை'

"காதலில் முழுமகிழ்ச்சிக்கு இருவருமே சமமாகத் தோற்க வேண்டும், இருவரில் ஒருவர் மட்டுமே ஜெயித்துவிடுவது போல அடைவது இன்பமல்ல. வேட்டிை. வேட்டையில் தான் குறிவைத்த மிருகத்தை வலையில் பிடித்து வீழ்த்து வார்கள்'

"வேட்டையில் பிடிபட்டி மிருகம் போல வாழ்ந்து விட்டதாகச் சொல்கிருய் சுலபா! உனக்கென்று தனியாக ஆசைகள் எதுவும் இல்லையா?"

'உண்டு கோகிலா! உன்னிடம் சொன்னல் நீ ஒரு வேளை என்னைத் தப்பாக எண்ணிக்கொள்ள நேரிடும் -

"அசடே? இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கிறது? நான் என் மனசைத் திறந்து உன்னிடம் பேசுகிறேன். நீ உன் மனசுவிட்டு என்னிடம் பேசமாட்டேனென்கிருய்?"

'அன்றரும்பிய மலராகப் பரிசுத்தமாக-ஆண்கள் யாரும் தீண்டாத கன்னியாக இருந்த என்னை விலை கொடுத்து ஒவ் வொருவராக வேட்டையாடினர்கள். முப்பது வயது முடிவதற் குள்ளேயே எண்பது வயது மூப்பை என்னுள் திணித்தார்கள். என் மனத்தின் இயல்பான ஆசை. ஊற்றுக் கண்களை எல்லாம் அடைத்தார்கள். பணத்தால்-புகழால் அந்த இனிய ஊற்றுக் கண்கள் அடைபட்டுப் போயின’’

"நீ சொல்வது முழு உண்மை இல்லை சுலபா உனக்குள் இன்னும் ஏதோ ஒர் ஆசை இருக்க வேண்டும். அதை நீ மறைக்கிருய்'

"எப்படி? எதளுல் நீ இதை அதுமானிக்க முடிகிறது?"

'உன்னிடம் எல்லாவற்றின் மேலும் வெறுப்பும் கசப்பும் நிரம்பியிருக்கின்றன. எல்லாவற்றையும் வெறுப்பவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/53&oldid=565721" இலிருந்து மீள்விக்கப்பட்டது