பக்கம்:சுலபா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ôሹ6ùርm”

பான்மையுள்ளவள் போல அவர் சித்திரிக்க முயல்வது சுலபா வுக்கு எரிச்சலூட்டியது. தன் இளமையையோ, அழகையோ இப்படிக் குறைத்து மதிப்பிடும் எந்த உரையாடலையும் அவள் ஒப்பியதுமில்லை உடன்பட்டதுமில்லை. மறுக்காமல் விட்டது. மில்லை.

"நாம மட்டும் போன நூற்ருண்டிலியா இருக்கோம்? நாமளும் இந்தக் காலத்திலே தானே இருக்கோம் ஆடிட்டர் சார்?' " -

"இருக்கோம்! ஆனால் பெரியவங்க சொல்றதை இந்தக்

காலத்து பசங்க எங்கேம்மா கேட்கிருங்க? நீயே சொல்லு'...

மீன்டும் மீண்டும் சுலபாவுக்கும் கவிதாவுக்கும் நடுவி லேயே ஒருதலை முறைக்காலம் இடைவெளிப்படுவது போலக் கனகசபாபதி பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆத்திர மூட்டிவிட்டது. . -

'எதுக்கும் கண்டிச்சு வையுங்க சார்! இங்கே வேலை பார்க்கிறதஞலேதான் நான் கவலைப்பட வேண்டியிருக்கு... இன்னுரோடி பெர்ஸனல் செகரெட்டரியாம்...இப்பிடிக் கண்டபடி சுத்தருளாம்னு பேராயிடிப்படாது'

"சொல்றேன்.நாம சொல்லத்தான் சொல்லலாம். அப்புறம் கேட்கிறதும் கேட்காததும் அவள்பாடு'-என்று சமாதானம் சொல்லி ஃபோனே வைத்தார் ஆடிட்டர்.

ஏற்கனவே சுலபாவிடம் வேலைக்குச் சேருவதற்கு முன்னல் கவிதாவுக்கு ஒரு ஸ்பெஷல் கிளாஸே நடத்தியிருந்தார் அவர். அவளுக்கு எது எது பிடிக்கும் எது எது பிடிக்காது என்று படித்துப் படித்துக் கவிதாவிடம் சொல்லியிருந்தார் அவர்.

அங்கே வேலை பார்க்கிற வரையில் அவளைவிட அழகாகத் தோன்ற முயலாதே! அவளை விட நீ அழகானவள் என்பதை மறந்துவிடு, அவளைவிட நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/68&oldid=565736" இலிருந்து மீள்விக்கப்பட்டது