பக்கம்:சுலபா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பச, 69

பிறரிடம் கவிதா இந்தியும் ஆங்கிலமும் பேசுமுன் எஜமானிக்கு அது உகப்பாக இருக்குமா இல்லையா என்று பார்த்து யோசித்துத் தயங்கிப் பேச வேண்டியிருக்கும். எஜமானிக்குப் பிடித்தால் பேசவேண்டும். பிடிக்காவிட்டால் பேசாமல் இருக்க வேண்டும்.

படப்பிடிப்புக்காக அவர்கள் வெளிநாடு போயிருந்தபோது சுலபசவின் முன்னிலையில் ஒரு வெள்ளைக்காரனிடம் கவிதா சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்ததைக் கவனித்துப் பொறுமையின்றி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க உடன் அமர்ந்திருந்தாவி சுலபன. கவிதாவே தன்னை அம்போ என்று விட்டுவிட்டு இன்னேர் ஆண்மகனிடம் இணைந்துபேச ஆரம்பித்தது சுலபகவுககுப பிடிக்கவிலலை. அதுவும் தனக்குத் தெரியாத மொழியில் படுலாகவமாக அவள் தன்னைப் பொருட்படுத்தாமல் இன்ைெருத்தனிடம் தனக்கு முன்பாகவே பேசியது அவளுக்குக் கடுப்பாயிருந்தது. காட்டுமிராண்டித்தனமாக நடுவே குறுக்கிட்டு,

'எண்ணடி உனக்குத்தான் இங்கிலீஷ் தெரியும்னு பொளந்து கட்டிக்கிட்டிருககியா-’-என்றாள். கவிதா வுக்குச் சை என்ருகிவிட்டது. குறுக்கிட்டுப் பேசுமுன் லாரி ஃபார் த இண்டரெப்ஷன்' என்று ஆயிரம வருத்தமும் மன்னிப் பும் கூறிவிட்டு மற்றவர்கள் உரையாடலில் குறுக்கிடுகிற அதி நாகரிக நாட்டில் சுல்பாவோட கூடச் சென்றதே பாவம் என்று பட்டது கவிதாவுக்கு. சுலபா ஒவ்வொரு நேரம் ஒவ் வொரு மூடில் இருந்தான். அவளைத் தேடிவந்து யாராவது ஆங்கிலத்தில் பேசினால் அதைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்ல அவன் கூறும் பதில்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்ல என்று கவிதாவின் உதவி அவளுக்குத் தேவைப்பட்டது. அப்படி வேளைகளில் எல்லாம் கவிதா. தயங்காமல் ரெடிமேடாக உடன் முன்வந்து தனக்கு உதவ வேண்டும் என்று சுலபாவே எண்ணினுள், கட்டிகளயும் இட்டாள். . . . -

&—5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/71&oldid=565739" இலிருந்து மீள்விக்கப்பட்டது