உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

திருவிளையாடற்

பயகரமாலை

சுவடி இயல் என்ற ற ஒரு பிரபந்தம்

பயங்கரமாலையாகி

உரையோடு கிடைத்தது. திருவிளையாடற் பயங்கரமாலை என்ற பெயரோடு ஒரு சிறிய நூல் மிகப்பிழையாக அச்சிலிருப்பதை நான் படித்திருக்கிறேன். அதற்குப் பயங்கரமாலையென்று ஏன் பெயர் வந்ததென்பது விளங்காமலேயிருந்தது. மிதிலைப்பட்டியிற் கிடைத்த பிரதியில் பயகரமாலை என்ற பெயர் இருந்தது கண்டு உண்மை விளங்கியது. பயத்தை நீக்கும் பாலை என்னும் பொருளைத் தரும் அச்சேறியது' 6 © என்பர் உ.வே.சா. அவர்கள். இவை பல்வேறு சுவடிகளில் காணப்படும் வேறுபாடுகள். எவ்வாறாயினும் பல சுவடிகளையும் கொண்டு மூலபாட ஆய்வின் அடிப்படையில் உண்மையான அல்லது சிறந்த பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம் பிறபாடங்களையும் வேறுபாடுகளாகக் காட்டிப் பதிப்பிக்க இச்சுவடிகள் பயன்படுவனவாகும்.

பயஹரமாலை,

பிறநூல் சுவடிகளின் பயன் : ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது அதே நூலுக்குரிய பல சுவடிகள் பயன்படுவது போல வேறு நூல்கள் எழுதப்பட்ட சுவடிகளும் பயன்படுகின்றன. பிறநூல் களில் உரையாசிரியர் உரை, விளக்கவுரை, சான்றுகள், பிறநூல் மேற்கோள்கள் போன்றவற்றைக் கூறுமிடத்து வேறுநூலின் பாடல் களும் கருத்துகளும் எடுத்துக்காட்டப்படுகின்றன. எழுதினோர் செய்த பிழையாலும், எழுத்துத் தெளிவின்மையாலும், சுவடியின் சீர்கேடுகளாலும் நன்கு விளங்காத அல்லது பழுதுபட்டுவிட்ட பகுதிகளைப் பிறநூல்களில் காட்டப்பெற்றுள்ளவற்றின் கொண்டு திருத்தம் செய்துகொள்ளவும் முழுமைப் படுத்திக் கொள்ளவும் முடிகிறது.

புறநானூறும் தொல்காப்பிய மேற்கோளும்

"பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே

ஆடுநர்க் கீத்த பேரன் பினனே

அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே"

துணை

என்பன புறநானூற்று 221 ஆம் பாட லின் தொடக்க அடிகள். பலபதிப்புகளிலும் இவ்வடிகளே காணப்படுகின்றன. இவற்றுள் பேரன் பினனே' என்பதற்கேற்ற ஒலி அமைப்பில் 'பல்புக

ழினனே' என்றிருப்பதும், 'திண்ணன் பினனே' - என்பதற்கேற்ப ஆய்கோ லினனே' என்றிருப்பதும் பொருத்தமுடையதாகும்.

68. என்சரித்திரம், பக். 945.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/100&oldid=1571173" இலிருந்து மீள்விக்கப்பட்டது