உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

85

தொல்காப்பியப் பொருளதிகாரம், புறத்திணை இயல் 24 ஆம் நூற்பாவின் மன்னைக் காஞ்சித்துறைக்கு இப்பாடல் எடுத்துக் காட்டப்படுகிறது. ஒரு தொல்காப்பியச் சுவடியில் உள்ள பல்புகழினனே, ஆய்கோ லினனே என்னும் தொடர்கள் பாடவேறு பாடாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவையே சிறந்த பாடமாகக் கொண்டு பதிப்பிக்கப்பெறவேண்டியவையாகும்.

புறநானூறு - உரையும் பிறநூல் உரைகளும்: “யாற்று நீரும் ஊற்று நீரும் மழைநீரு முடைமையான், கடற்கு முந்நீரென்று பெயராயிற்று. அன்றி முன்னீரென்று பாடமோதி நிலத்திற்கு முன்னாகிய நீரென்று முரைப்ப" என்பது புறநானூற்றின் 9 ஆம் 9 பாடலில் வரும் முந்நீர் என்ற சொல்லுக்கு உரையாசிரியர் தரும் விளக்கம். ஆனால், பெரும்பாணாற்றுப்படையின் உரை, முந்நீர் நாப்பண் (வரி 441) என்ற தொடருக்கு, 'நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழிலையுடைய நீர்க்கு நடுவே' என்று கூறுகிறது.

"முந்நீர் - கடல்; ஆகுபெயர்; ஆற்றுநீர்; ஊற்றுநீர், மேனீர் என இவை என்பார்க்கு அற்றன்று; ஆற்றுநீர் மேனீராகலானும், இவ்விரண்டு மில்வழி ஊற்றுநீருமின்றா மாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று. முந்திய முந்திய நீரெனின், 'நெடுங் கடலுந் தன்னீர்மை குன்றும்' (குறள் .17) என்பதனால் அதுவும்

நீர்

மேனீரின்றி அமையாமையின் ஆகாது. ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின், முச்செய்கையையுடைய ய முந்நீரென்பது. முச்செய்கையாவது மண்ணைப்படைத்தலும் மண்ணையழித்தலும் மண்ணைக்காத்தலுமாம்' சிலப்பதிகார உரை. இவ்வாறு பல நூல் சுவடிகளிலும் ஒரு தொடருக்குப் பலவகையான உரைகள் கிடைக்கின்றன. சிறந்த உரையைத் தேர்ந்தெடுக்க முடிகிறது.

என்பது

பரிபாடலும் பிறநூல் மேற்கோள்களும் : பரிபாடல் எழுபது பாடலையுடையதாயினும் சுவடியில் இருபத்திரண்டு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றைத் தவிர "பழைய உரைகளிற் காட்டப் பெற்ற மேற்கோள்களிலிருந்து கிடைத்த இரண்டு முழுப்பாடல் களும், சில உறுப்புக்களும், புறத்திரட்டு முதலியவற்றிலிருந்து

கிடைத்த சில உறுப்புக்களுமே நூலாக அச்சாகியுள்ளன.

69.

70.

70

சிலப்பதிகாரம், 17: உள்வரி. அடியார்க்கு நல்லார். பரிபாடல், முகவுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/101&oldid=1571174" இலிருந்து மீள்விக்கப்பட்டது