உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

சுவடி இயல்

பிறநூல் சுவடிகளால் பாடல், உரை ஆகியவை திருத்தம் பெற்றன; முழுமை பெற்றன என்பதற்கும் பொருள் விளக்கமுற்றன என்பதற்கும் பதிப்பாசிரியர்களின் அனுபவக்கருத்துகளும் துணை நிற்கின்றன.

பிறநூல் சுவடி பற்றி உ.வே.சா : (குறுந்தொகை)

66

'குறுந்தொகைப் பிரதிகளை ஒப்புநோக்கிய பிறகு தொல் காப்பிய உரை முதலியவற்றைப் படித்து அங்கங்கே மேற்கோளாக ஆளப்பட்ட இந்நூற் செய்யுட்களையும் செய்யுட்பகுதிகளையும் தொகுத்து அவற்றிற் கண்ட பாடபேதங்களையும் கொண்டேன். இம்முயற்சியால் பல பல அருமையான திருத்தங்கள் கிடைத்தன; பல ஐயங்கள் நீங்கின.1

குறித்துக்

உ. வே. சா. புறநானூறு : இந்நூலிலிருந்து வேறு நூல்களி னுடைய பழையவுரைகளினிடையே உரையாசிரியர்களால் பூர்த்தி யாகவும் சிறிது சிறிதாகவும்

எடுத்துக் காட்டப்பட்டிருந்த உதாரணங்கள், சிற்சில பாடல்களிலிருந்த வழுக்களை நீக்கிச் செவ்வைசெய்து கொண்டு பொருளுண்மை காணுதற்கும் பெருந் துணையாக விருந்தன.'2

உ.வே.சா.பதிற்றுப்பத்து : எட்டுப்பத்திலும் இல்லாத இந் நூற்பாடல்கள் சில தொல்காப்பியப் பொருளதிகார உரையால் தெரியவந்தன. அவை வருமாறு: (தொல்.பொருள்-84 இன் காட்டுகள்) என்பன உ. வே. சா. அவர்களின் அனுபவக்

கருத்துகள்.

78

பிறநூல் சுவடிபற்றி எஸ். வையாபுரிப்பிள்ளை : (களவியற் காரிகை)

“கற்கந்து மெறிபோத்தங்... சிலம்புபுடைப்ப - இவற்றுள்

விடு

பட்ட இடங்கள் இறையனாரகப்பொருளுரையினின்று பூர்த்தி செய்யப்பட்டவை.(...)*

செயல்

என்கிறார் எஸ். வையாபுரிப்பிள்ளை. இவ்வனுபவச் முறைக் கருத்துகள் பிறநூல் சுவடிகளின் பயனை மேலும் உறுதிப் படுத்துகின்றன. இவ்வனுபவத்தினால்,

71.

73.

குறுந்தொகை, முகவுரை. 72. புறநானூறு, உ.வே.

முகவுரை.

பதிற்றுப்பத்து, முகவுரை. 74.

பக், 38-39.

வே. சா.

களவியற்காரிகை. முகவுரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/102&oldid=1571175" இலிருந்து மீள்விக்கப்பட்டது