உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

முடிவு :

87

“முதலில் ஏடுதேடுகையில் அச்சிட்ட புத்தகங்களின் ஏடுகளாக இருந்தால் அவற்றை அதிகமாகக் கவனிப்பதில்லை. நாளடைவில் செய்து வந்த ஆராய்ச்சியால் அச்சிட்ட புத்தகங் களிலுள்ள பிழைகளைத் திருத்திக் கொள்வதற்கும், நல்ல பாடங்களைத் தெரிந்து கொள்வதற்கும் ஏட்டுப் பிரதிகள் மிக்க உதவியாக இருப்பதை உணர்ந்தேன். உணர்ந்தேன். ஆதலின் அது முதல் அச்சிட்டவற்றின் ஏட்டுப் பிரதிகள் கிடைக்குமேல் அவற்றையும் பொன்னே போலப் போற்றி ஆராய்ச்சி செய்யும் வழக்கத்தை மேற்கொண்டேன்”'க என்கிறார்

உ.வே.சா.

மேற்

சங்ககாலம் முதல் இன்றுவரை சுவடிதிரட்டும்பணி கொள்ளப்பட்டது. ஆயினும் தமிழ்ச்சுவடிகள் பல இயற்கை யாகவும் செயற்கையாகவும் அழிந்துள்ளன. நூல்களைக் கற்கும் ஆர்வம் பெற்றவர், அச்சிட்டு வெளியிடத்துணிந்தவர் ஆகியோரால் திரட்டிச் சேர்க்கப்பெற்ற சுவடிகளைத்தவிர மேலும் சிதறுண்டு கிடக்கும் சுவடிகள் பலவாகும். அவற்றை முறையாகத் திரட்டி வெளியிட வேண்டியது இன்றியமையாததாகும்.

75. என் சரித்திரம், பக். 920921.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/103&oldid=1571176" இலிருந்து மீள்விக்கப்பட்டது