உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

சுவடிகளைப் பகுத்தலும் காத்தலும்

கற்பதற்கும் காப்பதற்கும் பதிப்பிப்பதற்கும் என்ற மூன்று நிலையில் சுவடிகளைத் திரட்டினர். அச்சு நூல்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் கற்பதற்காகச் சுவடிகளைத் தேடுதல் இல்லை யாயிற்று. அழியாது காத்தற்கும் பதிப்பித்தற்குமே சுவடிகளைத் தேடித் திரட்டும் செயல் வழக்காற்றில் இருந்து வருகிறது. தனியார் ஒருசில சுவடிகளை மட்டுமே வைத்திருக்கும்போது அவற்றையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. பதிப்பிப்பதற்காக ஒருசில சுவடிகளை வாங்கி வைப்பவர்களும் அவற்றைக் காக்க வேண்டியுள்ளது. பெரிய நிறுவனங்களில் மிகப்பலவாகிய சுவடி களைத் திரட்டி வைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்நிறுவனங்களில் சேர்த்து வைத்துள்ள சுவடிகளை முறைப் படுத்திப் பயன்படுத்த எளிமையாக்கி வைப்பதும், தூய்மை செய்து வைப்பதும், மேலும் பூச்சி அரிக்காதவாறு பாதுகாப்பதும் ன்றியமையாதவையாகின்றன. தனியாரும் நிறுவனங்களும் சுவடிகளை முறைப்படுத்திப் பாதுக ஒக்கும் வழிவகைகளை இப்பகுதி ஆராய்கிறது.

அ. பகுத்தல்

.

சட்டங்களும்

தூய்மை செய்தல் : கிடைக்கும் சுவடிகள் தூய்மை இன்றி, ஏடுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு கிடப்பதுண்டு. பாதுகாப்புக்குரிய கயிறும் பெரும்பாலும் ஒழுங்காயிரா. முதலில் இவற்றைத் தூய்மை செய்ய வேண்டும். சுவடிகள் பழமையடைந்து, நன்கு உலர்ந்து கிடக்குமாதலின் தூரிகை, துணி முதலிய கருவிகளைக் கொண்டு துடைக்கக் கூடாது. முதலில் லைட் டீசல் ஆயில், லெமன் கிராஸ் ஆயில் ஆகியவற்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/104&oldid=1571178" இலிருந்து மீள்விக்கப்பட்டது