உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடிகளைப் பகுத்தலும் காத்தலும்

89

உட்புறமெல்லாம் நன்கு

ஒருவகை எண்ணெயைப் பூசவேண்டும். நனையுமாறு பூசிச் சிறிது நேரங் கழித்து ஒன்றோடொன்று ஒட்டிக் கிடகும் ஏடுகளைப் பொறுமையோடு தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். அதன் பிறகு தூரிகை போன்ற கருவிகளால் தூய்மை செய்யவேண்டும்.

சட்டங்களையும்

சுவடியின் இருபுறமும் பாதுகாப்புக்குரிய கயிற்றையும் சரிசெய்தோ புதுப்பித்தோ சுவடிக்கட்டினை ஒழுங்கு படுத்தினால் கையாளுவதற்கு எளிமையாக இருக்கும்.

கூர்ந்து ஆய்தல் : ஏடுகளை வரிசைப்படுத்துதல் வேண்டும். ஏடுகளுக்கு எண்கள் கொடுத்திருப்பின் இப்பணி எளிதாக முடியும். சில சுவடிகள் வரிசை எண் மாறாமல் இருக்கவும் கூடும். மாறியிருந்து ஏட்டு எண்ணும் எண்ணும் இல்லாமலிருந்தால், பாட்டு எண் களைக் கொண்டும், முதல் ஏட்டின் முடிவும் அடுத்த ஏட்டின் தொடக்கமும் பொருந்துவதைக் கொண்டும் ஏடுகளை வரிசைப் படுத்த வேண்டும். முடிவும் முதலும் பாட்டு, தொடர், பொருள் பொருத்தம் ஆகியவற்றில் ஒன்றாலும் பலவற்றாலும் பொருந்து மாற்றினால் வரிசையை அறிதல் முறையாகும்.

சுவடிகாணல் :

ஒரு

சுவடிக் கட்டினைக் கூர்ந்து

பல நூல் ஆய்வு செய்யும்போது பலவகைச் செய்திகள் புலனாகும். அதாவது, ஒரு சுவடிக் கட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் இருத்தல் கூடும்; அவை தனித்தனியே பிரிக்க முடியாதபடி, ஒரு நூலின் முடிவு ஒரு பக்கத்திலும், அடுத்த நூலின் தொடக்கம் அதே ஏட்டின் மறுபக்கத்திலுமாக எழுதப்பட்டிருக்கக் கூடும். அவற்றுள் ஒன்று தோத்திரம், மற்றொன்று மருத்துவம் போன்று பொருள் வேறுபாடுகளுடன் இருத்தலும் உண்டு. க்காரணங்களால் சுவடிகளைத் தனித்தனிக் கட்டுகளாகப் பிரித்து வைப்பதிலும், பொருள் வாரியாகப் பிரித்து வைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இவ்வாறான சிக்கல் ஏதுமின்றி தனித்தனியான ஏடுகளில் அமைந்த பல நூல்களின் தொகுப்பில், முதல் ஏடு, இறுதி ஏடுகளில் ஆசிரியர், சுவடிக்கு உரியோர், சுவடி எழுதிய காலம், சுவடி வரலாறு, சுவடியை எழுதியவர், எழுதக் க காரணம் ஆகிய பல குறிப்புகள் காணப்படும். அச்சுவடியிலிருந்து நூல்களைத் தனித்தனியாகப் பிரித்தால் இக்குறிப்புகள் ஒரு நூலுக்கு மட்டுமே உரியதாகிவிடும். மற்ற நூல்களுக்கான வரலாறுகள் மறைக்கப்பட்டுவிடும்,

எனவே

கட்டில் உள்ளவாறே ஏடுகளை வரிசைப்படுத்தி, இருக்கும் நூல் களுக்கான பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/105&oldid=1571179" இலிருந்து மீள்விக்கப்பட்டது