உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

சுவடி இயல் எண் இடுதல் : பலநூறு சுவடிகள் உள்ள நிறுவனங்களில் நூல்களுக்குரிய பெயர்களை மட்டும் சுவடியின்மேல் எழுதி வைப்பது பயன் தராது. சுவடிகளை விரைவில் எடுப்பதற்குரிய முறையில் சுவடிகளுக்கும், அதில் உள்ள நூல்களுக்கும் வரிசை எண் கொடுத்து வைப்பது முறையானதும் பயனுடையதும் ஆகும்.

.

சுவடிக் கட்டுகளுக்குக் கொடுக்கப்பெறும் வரிசைஎண், கட்டு எண் எனப்படும். அச்சுவடிக் கட்டிலுள்ள நூல்களுக்குக் கொடுக்கப் பெறும் வரிசைஎண் நூல்எண் எனப்படும். ஒரு சுவடிக் கட்டில் நான்கு நூல்கள் அடங்கியிருக்குமாயின் முறையே, கட்டுஎண் நூலக எண்

1.

நூலின் பெயர்

ஏடுகள்

அகத்தியர் ஆயிரம்

1-17

தேரையர் வயித்தியம்

18-62

சடகோபர் ஊசல்

71-85

1.

2.

3. 4.

என இவ்வாறான தகவல்கள்

மாரியம்மன் தாலாட்டு 63-70

அடங்கிய தாளினைச் சுவடிக் கட்டின்மீது பொருத்த வேண்டும். அத்தாள், கட்டின் மேலுள்ள சட்டத்தின் அகல அளவில் சுமார் 13 செ.மீ. நீளமுள்ளதாக இருத்தல் நல்லது. கீழே துணியும் மேலே தாளுமாக ஒட்டப்பட்ட தாயின் விரைவில் அழியாமல் இருக்கும். அதனைக் கயிற்றில் கோத்துச் சட்டத்தோடு பொருந்துமாறு வைத்துக் கட்டி

வைக்கலாம். இதேபோல, கட்டுஎண் நூலக எண்

நூலின் பெயர் தக்க நாடகம் பிள்ளையந்தாதி

திருவங்கமாலை

ஏடுகள்

1-92

1-60

61-110

2. 3.

5.

6.

7.

என எண்கள் தொடர்தல் வேண்டும். பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். விரும்பும் நூலினை அகரவரிசை அட்டை களின் துணைகொண்டு விரைவாக எடுக்க முடியும். ஒரு நிறுவனத்தில் உள்ள சுவடிகளில் இறுதிச் சுவடியை எடுத்துப் பார்த்தால் இந்நிறுவனத்தில் இத்தனைச் சுவடிகள் உள்ளன இத்தனை நூல்கள் அடங்கியுள்ளன என்பதையும் அறியலாம்.

பதிவேடுகள் : தூய்மை ம செய்து, ஒழுங்குபடுத்தி, எண் கொடுத்து முடித்த சுவடிகளைப் பதிவு செய்து வைக்க வேண்டும்.

அதுவே சுவடிகள் நிலையாக இருப்பதற்குரிய வழியாகும். இப்பதிவேட்டு முறையை இரண்டு வகைப்படுத்தலாம். ஒருவகை, பதிவேடுகள் எனவும், மற்றொருவகை பெயர்பெறும்.

6 வழிகாட்டிகள் எனவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/106&oldid=1571180" இலிருந்து மீள்விக்கப்பட்டது