சுவடிகளைப் பகுத்தலும் காத்தலும்
93
சுவடியைப் பற்றிய வரலாறு அறிய உதவுவது சுவடி வரவுப் பதிவேடு; சுவடிகளைப் பயன்படுத்துவோர் சுவடிகளின் இருப்பை அறிய உதவுவது இருப்புப் பதிவேடு ; ஒரு எண்ணுள்ள சுவடி எந்தக் கட்டில் உள்ளது என்பதை அறியவும், சுவடிகளைச் சரிபார்க்கவும் துணைபுரிவது கட்டுஎண் பதிவேடு. ஒவ்வொரு சுவடியையும் பெற்று ஒழுங்குபடுத்தியவுடன் இம்மூவகைப் பதிவேடுகளிலும் தெளிவாகப் பதிவு செய்தல் வேண்டும். ஓலைச் சுவடி, தாள் சுவடி களுக்குத் தனித்தனிப் பதிவேடுகள் வைக்கலாம். ஓரே பதிவே டாயின் முதல் இருவகைப் பதிவேடுகளிலும் ஒரு வரிசை ஒதுக்கி, ஓலை அல்லது தாள் என்பதை அந்தந்த வரியில் குறிப்பிடலாம். கட்டுஎண் பதிவேட்டிற்கு ஓலை/தாள் என்பது பொருந்தாது. தனித்தனிப் பதிவேடுகளே வேண்டும். கட்டு எண்களும் தனித்தனி வரிசையாக அமையும்.
வழிகாட்டிகள் அகரவரிசை அட்டைகள் : அகரவரிசை அட்டைகளை மூன்று வகையில் தயாரித்து, தனித்தனி அறைப் பெட்டிகளில் வரிசைப்படுத்தி வைப்பது சுவடியைப் படிக்க வருவோ ருக்குப் பயன் அளிக்கும். அவை நூல்பெயர் அகரவரிசை (பொதுப் பட்டியல்); ஆசிரியர் பெயர் அகரவரிசை; பொருள்வாரி அகரவரிசை என்பனவாகும். அச்சு நூலுக்குரிய அட்டைகளுக்கும், சுவடிகளுக் குரிய அட்டைகளுக்கும் வேறுபாடு உண்டு. சுவடிக்குரிய அட்டை யில் பதிப்பு, ஆண்டு முதலிய விவரங்கள் கிடையாது.
நூல்பெயர் அகரவரிசை (மாதிரி அட்டை)
கடலூர் பள்ளு
ஆ.கந்தசாமிப் புலவர்
676007. 171.
தொல்காப்பியம்
எழுத்ததிகாரம்
நச்சினார்க்கினியர் உரை
67 Goor. 360.