உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

ஆசிரியர் பெயர் அகரவரிசை (மாதிரி அட்டை)

கந்தசாமிப் புலவர், ஆ.

GT GODT. 171.

சடலூர் பள்ளு

PS SELLING MATCHES

சுவடி இயல்

நச்சினார்க்கினியர் உரை

தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்

GT GODT. 360.

பொருள்வாரி அகரவரிசை : நூல்பெயர் அகரவரிசை அட்டை களையே மீண்டும் ஒரு தொகுதி எழுதிக்கொள்ள வேண்டும். அவற்றை அகராதி, நிகண்டு, சங்க இலக்கியம், இலக்கணம், சிற்றிலக்கியம், சமயம், மருத்துவம், இசை என்ற பொருள் அடிப் படையில் பிரித்துப் பொருள் வகையை வரிசைப்படுத்திக்கொண்டு- ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனி அட்டை விளக்கத்துடன்- உயர்த்திப் பிரித்துக் காட்டுமாறு அறைப் பெட்டியில் அமைத்து, அவ்வப்பொருளில் பிற சுவடி, நூ ால்பெயர் அட்டைகளை அட்டைகளை அகர வரிசைப்படுத்தி அகரவரிசை அறைப்பெட்டிக்குள் வைக்கவேண்டும்.

பயன்படுத்துவோருக்கு நூல்பெயர் மட்டும் தெரியும்போது நூல் பெயர் அகரவரிசையின் துணைகொண்டு நூல்களை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு ஆசிரியருடைய சுவடிகள் என்னென்ன உள்ளன என்பதை அறிய ஆசிரியர் பெயா அகர வரிசை பயன்படும். தேவையான ஒரு பொருளில் என்னென்ன சுவடிகள் உள்ளன என்பதைப் பொருள்வாரி அகரவரிசை அட்டை களின் வழி தேர்ந்தெடுக்கலாம்.

விளக்க அட்டவணை : தேவைப்படும் சில சுவடிகளை அகர வரிசை அட்டைகளின் மூலம் தேர்ந்தெடுக்கிறோம். அச்சுவடிகளில் என்னென்ன செய்திகள் உள்ளன? பாடலா? உரைநடையா? எத்தனைப் பாடல்கள் உள்ளன? சுவடி முழுமையாக உள்ளதா? என்பனவாகிய செய்திகளை அறிய ஒவ்வொரு சுவடியையும் எடுத்துப் பிரித்துப் பார்க்கவேண்டும். பிற இடங்களில் உள்ளவர் கள் இந்நிறுவனத்தில் உள்ள சுவடிகளைப் பற்றி மேற்குறித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/110&oldid=1571184" இலிருந்து மீள்விக்கப்பட்டது