உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடிகளைப் பகுத்தலும் காத்தலும்

95

செய்திகளை அறியவேண்டும். இவ்விரண்டு நிலைகளுக்கும் முழுமை யாகப் பயன்படுவது விளக்க அட்டவணை. இவ் அட்டவணையை முறையாகத் தயாரித்து அச்சிட்டுவிட்டால் பல இடங்களிலும் உள்ளவர்கள் இவ் அட்டவணையைப் பெற்றுப் பயன்பெற இயலும். இவ் அட்டவணையில் அடங்கவேண்டுவனவற்றை மாதிரி ஒன்றின் மூலம் விளக்கலாம்.

மாதிரி

எண்.2363. தண்டலையார் சதகம் (பழமொழி விளக்கம்) ஓலை.38×3 செ.மீ. ஏடு 36. வரி 5. மொழி - தமிழ். எழுத்து தமிழ். பழுதடைந்தது. முழுமையானது. அச்சாகியுள்ளது. தொடக்கம்

தண்டலையார் சதகம் காப்பு

சீர்கொண்ட கற்பகத்தை வாதா விநாயகனைத் தில்லை வாழும் ஏர்கொண்ட நவகண்ட மிசைந்தபழ மொழிவிளக்க மியம்பத்

நூல்

தானே.

வரமளிக்குந் தண்டலையார் திருக்கோவி லுட்புகுந்து வலமாய் வந்தே

திருவிளக்கிட் டார்தமையே தெய்வமறிந் திடும்வினையுந் தீருந் தானே (1)

முடிவு

நித்தமெழு நூறுநன்றி செய்தாலு மொருதீது நேரே வந்தால் எத்தனைசெய் தாலுமென்ன பித்தளைக்குத் தன்னாற்ற

மியற்கை யாமே. (100)

பழ

(பாடல்களை முழுமையாக எழுதவேண்டும்) குறிப்பு : இந்நூல் பொன்விளைந்த களத்தூரைச் சேர்ந்த படிக்காசுப் புலவரால் இயற்றப்பெற்றது. தண்டலை நீணெறி என்னும் சிவத் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்மீது பாடப்பெற்றது. ஒவ்வொரு பாட்டின் ஈற்றடியும் ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டது. களை உள்ளடக்கிய நூல். நூறு பாடல்களும் முழுமையாக உள்ளன. எழுத்துப் பிழைகள் உள்ளன. ஆயினும் பல நுண்ணிய பாடவேறுபாடுகளை உடையது. இவ்வாறு விளக்கம் கொடுத்து வைப்பது மேற்குறித்த இரண்டு நிலையிலும் பயன் தருவதாகும்.

இது சிறந்த அறவுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/111&oldid=1571185" இலிருந்து மீள்விக்கப்பட்டது