உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசை அட்டவணை : விளக்க அட்டவணைகளைப் போலச் சுருங்கிய அளவில் செய்திகள் அடங்கிய அகரியரிசை அட்டவணை ஒன்றை நிறுவனததில் உள்ள அனைத்துச் சுவடிகளுக்கும் தயாரித்து அச்சிட்டு வைப்பது பிற இடங்களில் உள்ளவர்களுக்குப் பயன்படுவதாகும். இதனையும் நூல்பெயர், ஆசிரியர் பெயா, பொருள்வாரித் தலைப்பு என்ற மூன்று அடிப்படையில் தயாரித்து அச்சிடலாம். அகரவரிசை அட்டைகள் நிறுவனத்தில் வந்து காண்போருக்குப் பயனபடுவதுபோன்ற பயனை வெளியில் உள்ளவர்களுக்கு இந்த அச்சு அட்டவணை அளிக்கும். நூலின் இரண்டு பக்கங்களிலும் தொடர்ந்து செய்திகளை அமைக்கலாம். சில வரிகள் மாதிரிக்குக காட்டப்படு கின்றன.

வரிசை எண

நூலின் பெயர்

ஆசிரியர்

பொருள்

ஓலை, தாள

முழுமை/குறை நூலக எண்

1.

அகத்தியர் வாகடம்

அகத்தியர்

மருத்துவம்

ஒலை

முழுமை

826

2.

ஆதியுலா

...

சிற்றிலக்கியம்

270

3.

இடைக்காடர்

இடைக்காடர் தத்துவம்

119

சூத்திரம்

3.

எண் சுவடி

கணிதம்

392

இது நூல்பெயர் அடிப்படையில் அமைந்த அகரநிரல் அட்டவணையாகும். இதேபோன்று ஆசிரியர் பெயரை அகரநிரல்படுத்தி முதலில் அமைத்து அவர் பெயரால் காணப்பெறும் நூல்களை அடுத்த வரிசையில் குறித்தல் வேண்டும். பிற விவரங்கள் அந்தந்த சுவடிக்குரியன எல்லா அட்டவணையிலும் ஒரே வகையாகஇருக்கும். பொருள்வாரி அட்டைகள் தயாரித்தது போலவே இவ்வகை அகரநிரலை அச்சிடலாம். இம் மூவகை அட்டவணை களும் மேற்குறித்த அட்டைகளைப்போலப் பலருக்கும் பல்லாற்றானும் பயன் தருவதாக அமையும்.

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/112&oldid=1571186" இலிருந்து மீள்விக்கப்பட்டது