உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடிகளைப் பகுத்தலும் காத்தலும்

ஆ.

காத்தல்

சுவடிகளின் பாதுகாப்பு : சிறந்த

97

கருத்துகளையும் ஆணை வந்தனர்.

களையும் பழங்கால முதலே பாதுகாத்து பாதுகாத்து வந்தனர். அவ்வாறு காப்பாற்றி வைக்கப்பட்டவையே வைக்கப்பட்டவையே இன்று நம்மிடையே உலவும் இலக்கிய இலக்கணங்களும் பிறவாகிய கலைகளும் அரசு ஆணை களுமாகும். பழங்காலத்தில் இவற்றை இரண்டு வழிகளில் பாது காத்து வந்தனர். ஒன்று மனப்பாடம் செய்து மனத்தில் காத்தல்; மற்றொன்று சுவடிகள் முதலான எழுதப்படு பொருள்களில் பொறித்து வைத்தல். உள்ளத்தில் காத்தவை அவரவர் மறைவோடு மறைந்தன. சுவடிகளில் பொறித்து வைத்தவை நிலைத்தன. சுவடி களும் நிலையானவை அல்ல. அச்சுவடிகளைப் பாதுகாப்பதே பழந்தமிழர் கருத்துகளைக் காப்பதாகும்.

பழங்காலக் காப்புமுறை : கூர்மையான எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதப்பட்ட எழுத்துகள் ஓலை நிறத்திலேயே இருக்கும். அவை தெளிவாகத் தெரிவதற்காக மஞ்சள், இலைச்சாறு, கரிய மை வகை ஆகியவற்றில் ஒன்றைத் தேய்ப்பது வழக்காற்றில் இருந்தது. இவையெ பூச்சிக் கொல்லிகளாகவும் இருந்தன. மேலும் பாதுகாப் பிற்காக வேப்பிலை, வசம்பு ஆகியவற்றையும் பயன்படுத்தினர். சமையலறையில் புகைபடியுமாறு சுவடிகளைத் தொங்கவிட்டு வைத்துப் பாதுகாத்தனர்; புகைபடிவதனால் பூச்சிகள் இறப்ப தோடு எழுத்துகளும் நன்றாகத் தெரியும்” என்றும் கூறுவர்." து வழக்காற்றில் இருந்ததாகத் தெரியவில்லை.

இக்காலக் காப்புமுறை : பழைய சுவடிகளைத் தாள்களில் பெயர்த்து எழுதிவைப்பது ஒருவகைப் பாதுகாப்பாகும். ஆனால் இம்முறை, செய்தியைப் பாதுகாத்ததாகக் கருதப்படுமே ஒழிய, மூலத்தைப் பாதுகாத்ததாகாது. நுண் நிழற்படமாகவும், புகைப் படப் படியாகவும் எடுத்துப் பாதுகாப்பது மூலபாடத்தில் வேறு பாடில்லாத பாதுகாப்பு முறையாகும். இம்மூன்று வழிகளில் சுவடிச் செய்திகளைப் பாதுகாக்க முடியும். மேலும் மூலச் சுவடி யைப் பாதுகாத்தற்கும் சில முறைகள் கையாளப்பெறுகின்றன. அவற்றுள் சிஃபான் என்னும் மெல்லிய துணியைத் தாள்களின்மீது ஒட்டி வைத்துப் பாதுகாப்பது (மெண்டிங்) தாள்சுவடிகளைப் பாது காக்கும் முறையாக இருந்து வருகிறது. ஓலைச் சுவடிகளைப் பூச்சி முதலியன அரிக்காவண்ணம் பாதுகாக்கலாம்; நாளடைவில் மக்கி அழிவதிலிருந்து பாதுகாக்க முடியாத நிலையே காணப்படுகிறது. 1. அரசினர் சுவடி நூலக அறிக்கை, பக். 3-4.

Fr. 6--1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/113&oldid=1571187" இலிருந்து மீள்விக்கப்பட்டது