உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மருந்து

சுவடி இயல் பூச்சிகளை அழிப்பதற்கும் மேலும்வராமல் பாதுகாப்பதற்கும் கையாளும் சில முறைகளாவன : காற்றுப் புகாத பெரிய பெட்டி யில் (Fumigation Box), அறை அறையாகத் தடுத்து அதில் சுவடி களைவைத்து, மருந்தைத் தூவிச் சிலநாள் அப்பெட்டியை நன்றாக மூடிவைப்பதுண்டு." பிறகு சுவடிகளை எடுத்து உரிய இடத்தில் வைப்பர். அதே மருந்தையும், மருந்து கலந்த எண்ணெய் வகையை யும் சுவடிகளின்மீது அடிக்கடி (மாதம் இரண்டு முறையாவது) தெளிக்கலாம். தாள் சுவடிகளைத் துணியிட்டு (மெண்டிங்) த் தூய்மை செய்யும்போதும் கட்டமைப்பின்போதும் பயன்படுத்தும் பசையில் பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கலந்து பயன்படுத்தலாம். வகையைப் பயன்படுத்துவதில் ஓலைச்சுவடிகளுக்கு எண்ணெயைப் பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும். சுவடி யைப் பிரித்து ஓலைகளை நன்றாகப் பரப்பிவிட்டு பூச்சிகொல்லி எண்ணெயைப் பெரிய தூரிகையினால் (பிரஷ்) பூசவேண்டும். சிறிது காற்றாடிய பிறகு எடுத்துக் கட்டி வைக்கலாம். இவ்வாறு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எண்ணெயிட்டுக் காக்கும் முறையே மிகவும் சிறந்தது. இதனால் எழுத்தும் நன்றாகத் தெரியும். சுவடி யும் தூய்மையாகி, எடுத்துக் கையாள எளிமையாகவும் இருக்கும். மிகுதியான சுவடிகள் உள்ள நிறுவனங்களில் சுவடி துடைப்பதற் கெனப் பணியாளர்கள் இருந்தும் இருந்தும் ஒவ்வொரு சுவடியாக எடுத்து எண்ணெய் பூசுவதற்குச் சோம்பல் பட்டு எண்ணெய் தெளிப்பா னால் தெளிப்பது மட்டுமே செய்யப்படுகிறது. அழுத்தமாகக் கட்டப்பெற்றுள்ள சுவடிக்குள் சென்று அம்மருந்து முழுப்பயன் தருவதில்லை.

பொதுவாக-சுவடிகள்

உள்ள அறை காற்றோட்டமுடைய தாக, பரந்த இடவசதி உள்ளதாக, வெளிச்சமுடையதாக இருத்தல் வேண்டும். சுவடிகளை அடுக்கி வைக்கும் தட்டுகளிடையில் இடை வெளி நன்றாக இருத்தல் வேண்டும்; அதேபோல சுவடிகளையும் நெருக்கமில்லாமல் அடுக்கி வைப்பது நல்லது. தட்டுகளில் தூசு படியாதவாறு சுத்தம் செய்தல் அவசியம். சுவடிகளை வெளியில் எடுத்துப் பிரித்து நன்றாகத் துடைத்து வைப்பதும் எண்ணெயிடு வதும் செய்தால் நீண்ட நாள் காக்கமுடியும்.

பயன்படுத்தும் மருந்துகள்

2.

1. Lemon Grass Oil

2. Java Citranella Oil

மருந்துகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/114&oldid=1571188" இலிருந்து மீள்விக்கப்பட்டது