உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

101

சொற்கள் உச்சாரண பேதத்தால் எவ்வாறு மாறி வருகின்றன என்பதே நமக்குமுன் புலப்படுகின்றது. பிழையென்று முன்பு கொண்டன இப்பொழுது உயிர்த்தத்துவத்தோடு விளங்கு கின்றன. ஒரு காலத்தில் வழங்கிய உண்மை ரூபம் இன்னது என்பதை ஒருவாறு புலப்படுத்துகின்றன

1

என்னும் கருத்து எழுத்துப்பிழை என்பதையும் ஒருவகை வேறு பாடாகக் கொள்ளவேண்டும் என்று உணர்த்துகின்றது. இங்ஙனம் தமிழ்ச் சுவடிகளிலும் சுவடிப் பதிப்புகளிலும் காணப்பெறும் வேறு பாடுகள் மிகப்பலவாகும்.

சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் காலத் திலேயே பாடவேறுபாடு கண்டறியப்படுகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய நச்சினார்க்கினியர், சேனாவரையர் ஆகி யோரும் பாட வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுவர். ஆனால் உரை யாசிரியர்கள் 'என்பதும் பாடம்', 'எனப்பாடம் கொண்டால் பொருள் பொருந்துமாறு இல்லை' எனப் பாடவேறுபாட்டைப் பாடம் என்று மட்டுமே சுட்டினர். 'எனவும் பாடம்' என்பதை உ.வே.சா. முதலான பதிப்பாசிரியரும் கையாண்டனர். சுவடிப் பதிப்பை மேற்கொண்டபோது பிழை தீர்த்து அச்சுக்களிக்கப்பட்ட தாக மட்டுமே தெரிகிறது, பல ஏடுகளை வைத்துச் சோதித்து வேறேடு எழுதப் பெற்றதாகவும் சுவடிகளில் காணப்பெறு கிறது. (அ)

சுவடியைப் பதிப்பித்த சி. வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், எஸ். வையாபுரிப்பிள்ளை போன்றோர் பாட பேதம், ரூபபேதம், பிரதிபேதம் என்ற சொற்களைக் கையாண் டுள்ளனர். மறுபதிப்புகளாகவும் திருத்தப் பதிப்புகளாகவும் வெளி யான கழகப்பதிப்புகள், தொல்காப்பியம் அடிகளாசிரியர் பதிப்பு, அண்ணாமலைப் பல்கலைப் பதிப்புகள், உ.வே.சா. அவர்களின் பிற்காலப்பதிப்புகள் ஆகியவற்றில் இச் சொற்கள் முறையே பாட வேறுபாடு, வடிவ வேறுபாட்டினை வகைப்படுத்தி, வேறுபாடு தோன்றுதற்குரிய காரணங்களை ஆய்வு செய்கிறது.

பாடவேறுபாடு — வகை : : இடம்,பொருள், காலம், வடிவம், தன்மை, எண் என ஆறு நிலையில் பாடவேறுபாடுகள் தோன்று கின்றன. அவற்றுள்,

1.அ. திருவள்ளுவர்- கல்கத்தா தேசிய நூலகச் சுவடி, 3074.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/117&oldid=1571191" இலிருந்து மீள்விக்கப்பட்டது