உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

-

103

படுகிறது. இது பதிப்புகளில் நூல் பொயில் வேறுபாடு நோன்றி விட்டது என்பதற்குச் சான்றாகிறது. திருச்சிற்றம்பலக் கோவையார். “திருச்சிற்றம்பலக் கோவை யார் - பேராசிரியருரையுடன்" என்பதே சுவடிகளில் காணப்படும் நூல் தலைப்பு. 'மாணிக்க வாசகசுவாமிகள் அருளிச் செய்த திருக்கோவையார்' என்பதே ஆறுமுக நாவலர் பதிப்பு. பிற பதிப்பு களும் இவ்வாறே காணப்பெறுகின்றன. இது நூல் தலைப்பில் ஏற்பட்ட மற்றொரு வேறுபாட்டினைச் சுட்டுவதாகும்,

6

களவியற் காரிகை :' இறையனாரகப் பொருட்டுறைக்குச் சங்கச் செய்யுளாக உதாரணம் எழுதியது’ என்னும் சுவடித் தலைப்பு 'களவியற் காரிகை' என்று பதிப்பிக்கப் பெற்றது.

மனை நூல் : 'மனை வாஸ்து லட்சணம், சிற்ப சாஸ்திரம், மயநூல் என்னும் தலைப்புகளில் காணப்படும் சுவடிகள்’6 மனையடி சாஸ்திரம், மனை நூல் என்னும் பெயர்களால்

பதிப்பிக்கப்பெற்றன.

இராமகாதை :

66

நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில்”

இத்தலத்தி னிராமாவ தாரமே

பத்தி செய்து பரிவுடன் கேட்பவர்’’8

என்பவனாகிய இராமாயணப் பாடலடிகள், நூலுக்கு இராம காதை, இராமாவதாரம் என்னும் பெயர்களே சூட்டப் பெற்றன என்பதை உணர்த்துகின்றன. ஆனால் முதல் நூலின் அடிப் படையில் இராமாயணம் என்று வேறுபடுத்தப்பட்டு விட்டது.

உட்தலைப்பு :

திருக்குறள், யாப்பருங்கலக் காரிகை, கம்ப ராமாயணம் ஆகியவற்றின் அதிகாரம், இயல் ஆகிய தலைப்புகளில் காணப்பெறும் வேறுபாடுகளை உள்தலைப்பு வேறுபாட்டிற்குச் சான்றாகக காட்டலாம்.

திருக்குறள் பரிமேலழகர் உரை

அதிகாரம் - 7. புதல்வரைப் பெறுதல்

மணக்குவட உரை மக்கட்பேறு.

10

4. டி. 1169 - 1176 சுவடிகள். 5. ஆர்.435. சுவடி. ஆர். 239, 5951, 243.1021 சுவடிகள்.

6.

7. கம்ப. பாலகாண்டம், காப்பு-12.

9.

10.

8. மேற்படி

20

வை. மு. கோபால கிருஷ்ணமாச்சார்யர் பதிப்பு வ. உ. சிதம்பரம பிள்ளைப் பதிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/119&oldid=1571193" இலிருந்து மீள்விக்கப்பட்டது