உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

புறநானூறு

தனிப்பாடல்

105

ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்

ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்

பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி......

சுவைத்தோ றழூஉந்தன் மகத்துமுக நோக்க...... நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண......

என்பன புறநானூற்றுப் பாடலடிகள் (164). குமணனைப் பெருந் தலைச்சாத்தனார் பாடியது என்பது ஆசிரியர் பற்றிய செய்தி. இந்த முழுப் பாடலின் வடிவம் பல வகை வேறுபாடுகளோடு, தனிச்செய்யுட் சிந்தாமணி, தனிப்பாடல் திரட்டு ஆகிய நூல்களில் காணப்படுகின்றது. அவ்வடிவம் :

66

ஆடெரி படர்ந்த கோடுய ரடுப்பில் ஆம்பிப் பூப்பத் தீம்பசியுழல குழவி தாய்முக நோக்க

மனைவி யென்முக நோக்க யாமும்

நின்முக நோக்கி வந்தனங் குமுணா”11

என்பது தனிப்பாடலில் காணப்பெறும் வடிவம். ஒப்பிலாமணிப் புலவர் பாடல். பாடல். குமுணராசன் காட்டில் இருந்தபோது இருந்தபோது பாடிய அகவல் என்பது அத்தனிப் பாடலில் காணப்பெறும் செய்தி.

பாடலின் அனைத்திலும் வேறுபட்டு அமைந்த இப்பாடல், வறுமையுற்ற புலவர் பரிசில் வேண்டிக் குமணனைப் பாடியதாக உள்ள பொருள் புலப்பாட்டால் ஒருவர் பாடலே என்பது மட்டும் தெளிவாகிறது.

வடிவம், அடிகள், ஆசிரியர், நூல் ஆகிய

ஆ.

பொருள்

ஆசிரியரின் உண்மைத் தொடர்களில் வேறுபட்டனவெல்லாம் பாடவேறுபாடுகளே. ஆயினும் அவை அமையும் பொருட்தன்மை யால், வடிவ வேறுபாடுகளும் பிழைகளுமாகிய இரண்டு வகையும் வேறுபாடுகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. எனவே வேறுபாடுகள் இம்மூவகையில் அமைகின்றன. இவற்றுள்,

பாட

வேறு

பாடவேறுபாடு : ஆசிரியரின் மூலபாடத்தினின்றும் பட்டுப் பாட்டின் கருத்தை L மாற்றி அமைப்பது; தொடரின் பொருட்போக்கைத் திருப்பி அமைப்பது; ஆனால் பாட்டின் நடைக்கு ஏற்பச் சீரும் தளையும் சிதையாது, ஓசை நயம்படத் தோன்றி நிற்பதாகும்.

11. தனிப்பாடல் திரட்டு 1 பக்.29.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/121&oldid=1571195" இலிருந்து மீள்விக்கப்பட்டது