உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

சுவடி இயல்

நச்சினார்க்கினியர் - இளம்பூரணர்- வேறுபாடு

வாழிய வென்னும் செயவென் கிளவி இறுதி யகரம் கெடுதலும் உரித்து'

குக

என்னும் நூற்பாவிற்கு 'வாழும் காலம் நெடுங்காலமாகு என்னும் பொருளைத்தரும் வாழிய என்று சொ ல்லப்படும் செயவென் எச்சக்கிளவி இறுதி ‘ய’ஒற்றுடன் கெடுதலும் உரித்து’12

என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். ஆனால் இதனை, "வாழிய வென்னும் சேயென் கிளவி என்று கொண்டு

வாழிய என்று சொல்லப்படுகின்ற அவ்வாழுங்காலம் அண்மையது அன்றிச் சேய்மையது என்று து என்று உணர்த்தும் சொல் இறுதி 'ய' கெடுதலும் உரித்து என்றார் இளம்பூரணர்.

18

வாழிய என்பதை எச்சக்கிளவி என்றும் சொல் என்றும் கொண்ட உரையாசிரியர் இருவரும் 'வாழி கொற்றா' என்ற சான்றினையே காட்டினர்.

நீதிவெண்பா - அச்சு நூல் - சுவடி வேறுபாடு

அரிமந்தி ரம்புகுந்தால் ஆனை மருப்பும்

பெருகொளிசேர் முத்தும் பெறலாம்- நரிநுழையில் வாலுஞ் சிறிய மயிரெலும்புங் கர்த்தபத்தின் தோலுமல்லால் வேறுமுண்டோ சொல் 14

என்பது அச்சு நூலிற்காணும் பாடல். இதே பாடல்

வேறு :

......முத்தும் பெறலாம் நரிபுழையில் வாலுஞ் சிறிய மறியெலும்பும் கத்தபத்தின் தோலுமல்லால் வேறுமுண்டோ சொல்15

என்னும் வேறுபாட்டோடு சுவடியில் காணப்படுகிறது.

மயிரெலும்பும் என்று பாடங்கொண்ட அச்சுநூல்கள் ‘எளிய என்று உரைகூறின.

வால்களும் மயிர்களும் எலும்புகளும்.....'

ஆனால் சுவடியிலோ 'மறியெலும்பும்' என்ற பாடமும், எலிவாலுஞ் சிறிய ஆட்டெலும்பும்..... என்ற உரையும் காணப்படுகின்றது. இது பொருட்போக்கால் மாறுபடும் வேறுபாடாகும்.

12.

தொல்.

13. 14.

எழுத்து, 211. நச்சினார்க்கினியர் உரை.

தொல். எழுத்து, இளம்பூரணர் உரை.

நீதிவெண்பா, 2. 15. நீதிவெண்பா சுவடி. டி. 2283.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/122&oldid=1571196" இலிருந்து மீள்விக்கப்பட்டது