108
சுவடி இயல்
படுவனவாகின்றன. ஓசை வேறுபடுதலோ நிகழாமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேறுபாடுகளால் சீர், தளை கெடுதலோ
வடிவ வேறுபாடு : மூலபாடத்தினின்றும் வேறுபட்டதேயா யினும் சொல்லின் வடிவத்தால் மட்டுமே வேறுபட்டு நின்று மூலபாடத்தின் கருத்தைச் சிறிதும் மாற்றாதது வடிவவேறுபாடு எனப்படுகிறது. இதனால் பாடலின் பொருட்போக்கும் மாறுபடுவ தில்லை. பாட வேறுபாட்டினைப் போலவே சீர், தளை சிதைவ தில்லை, ஓசைநயமும் கெடுவதில்லை.
உருபுகள் வேறுபடுதல்
வேறு :
வேறு :
6 6
குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப்
பலவின் பழத்துள்தங்கும் மலை கெழு வெற்பனை" 19 "பலவின் பழத்தில் தங்கும் மலைகெழு வெற்பனை
"......கடலென முழங்குங் கூர்நுனை
வேலு மின்னின் விளங்கு முலகத்து" 0
"......கடலி னொலிக்கும் வைந்நுதி வேலு மின்போ லவிர்வரு ஞாலத்து
21
இவற்றுள் பழத்துள், பழத்தில் என்னும் வேறுபாட்டில் உள், இல் என்னும் இடைச் சொற்கள் வேறுபட்டு நின்று ஒரே பொருளைத் தருகின்றன. கடலென, கடலின்; மின்னின், மின்போல் என்னும் உவமைகளுள் முறையே என, இன், (இன்-போல்) என்னும் உவமை உருபுகள் மட்டுமே வேறுபட்டன. உவமைப் பொருளில் வேறுபட்ட வில்லை. கூர்நுனை-வைந்நுதி என்பன பொருளால் வேறுபடாது வடிவத்தால் மட்டும் வேறுபட்டு நிற்கும் தொடர்களாகும். உலகத்து என்னும் வடிவம் அதே பொருளில் ஞாலத்து என்று வேறு பட்டு நின்றது. விளங்கும் என்றது அவிர்வரு என்று வேறுபட்டதும் வடிவத்தால் மட்டுமே. இவ்வடிவங்களால் பாடலின் ஓசைநயம் எதுவும் கெடவில்லை என்பதையும் அவற்றின் அசைகளால் அறியலாம்.
குறில், நெடில், ஒற்று -வேறுபாடு
"கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானை கள்ளுண்ணாப் போதில் களித்தானை
வேறு:
19.
கலித்தொகை, 41. வரி 15-16.
21.
புறநானூறு சுவடி, டி. 284.
ன
(குறள்-930)
20.புறநானூறு, 42.