உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

சுவடி இயல் வடிவத்தால், சொல்லமைப்பால் இரண்டும் வேறுபட்டவையாகும். தனித்தனி சில தொடர்களில் வேறுபாடுகளைக் காட்ட முடியாத நிலையில் முழுமையுமே வேறுபட அமைந்துள்ளது. என்றாலும் ஆசிரியர் காலத்திலேயே- ஆசிரியராலேயே சில வேறுபாடுகள் தோன்றிவிட்டன என்பதற்கு இப்பாடல்களையும்

பெயர்த்திருக்கிறார். கருத்தால் ஒன்றேயாயினும்

பாடல்

கொள்ளலாம். முதல் மொழிபெயர்ப்பில் முதற்பாடல்:

"இனியநீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை! தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை! பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!8 இரண்டாவது மொழிபெயர்ப்பில் அதே பாடல்:

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்

குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை!8

சான்றாகக்

பாஞ்சாலி சபதம் - வேறுபாடு : 'கண்ணன் பாட்டு' என்னும் பாரதியாரின் படைப்புக்கு வ.வே. சுப்பிரமணிய ஐயர் முன்னுரை வழங்கியிருக்கிறார் (இரண்டாம் பதிப்பு).

"தமிழபிமானிகள்

இப்பதிப்பை ஆதரித்து வாங்கி ஆசிரிய னுடைய உற்சாகத்தை உயர்த்தி அவரால் தமிழில் புதிய இலக்கியங்கள் பிறக்கும்படி செய்வார்கள் என நம்புகிறேன்". என்னும் அம்முன்னுரைக் கூற்று ஆசிரியர் காலத்திலேயே எழுதப் பட்ட முன்னுரை என்பதைக் காட்டுகிறது. அம்முன்னுரையில் ஆசிரியரின் பாடலடிகள் சிலவற்றைச் சான்றாகக் காட்டுகிறார்.

அதாவது,

"நமது ஆசிரியரின் நூல்களை நம் நாட்டவர் சரிவர ஆதரிக்காததனாலே,

சுற்றிநில்லாதே போ - பகையே துள்ளி வருகுது வேல்”

என்றும்,

கைதனில் வில்லுமுண்டு; காண்டீவம் அதன்பேர்"

என்றும் உள்ள அக்ஷரலக்ஷம் பெறுமான பாக்களை எழுதியிருக்கும் அவருடைய உற்சாகம் குன்றிப் போயிருக்கிறது அவருடைய காட்டுகள்.

பாரதியார் கவிதைகள், தேசீயகீதங்கள், 18. 40. ஷை. பக். 607.

39. Chf. 19.

என்பன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/128&oldid=1571202" இலிருந்து மீள்விக்கப்பட்டது