உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

உத்தரன் கவிப்பற் கொருமக னாகி

சுவடி இயல்

பாடமோதி,

வேறு : "உத்தரன் கவிப்பற் கொருமகனாகி" என்று இக்குரங்கு உத்தரன் என்னும் பெயரோடு கவிப்பனென்னும் வாணிகற்கு ஒரு மகனாகப் பிறந்து என்பாரு முளர்" என்று காட்டு வார் அடியார்க்கு நல்லார். இவ்வேறுபாடு அவர் காலத்திற்கு முன்பே தோன்றிவிட்டது என்பதோடு பொருளும் கூறப்பட்டுள்ளது என்பதும் விளங்குகிறது. இதேபோல,

"இந்திர குமரரின் யாங்காண் குவமோ என்பதை,

இனி அந்தர குமரரென்பாருமுளர்" என்று காட்டுவார்.

வினை வேறுபாடு

"சிந்தா குலமுற் றென்னோ வென்னை வாட்டந் திருத்துவதே

வேறு:

.6

46

சிந்தா குலமுற் றென்னோ வென்னை வாட்டத் திருத்துவதே' “வாட்டந் திருத்துவதே யென்னும் சொற்கள் ஒரு சொன்னீர வாய், வாட்டுவதேயென்று பொருள்பட்டு, இரண்டாவதற்கு முடிபாயின.

வாட்டத்திருத்துவது என்று பாடமாயின்

வாட்டத்தின்கணிருத்துவது என்றுரைக்க”

என்பது உரையாசிரியர் கூற்று.

வேறுக்

பிற்காலத்து நிகழ்ந்த வேறுபாடு : வேறுபாடு : உரையில் குறிப்பிட்ட பாடுகளைத் தவிர இக்காலத்துள்ள சுவடிகளிலும், சுவடிகளை கொண்டு பதிப்பித்த பதிப்புகளிலும் காணப்படும் வேறு று பாடுகள் பிற்காலத்துப் படியெடுத்தோரால் நிகழ்ந்த வேறுபாடுகள் எனலாம். இவ்வேறுபாடுகளே இப்போதுள்ள சுவடிகளில் மிகுதி யாகக் காணப்படுகின்றன. இவற்றையே சுவடி வேறுபாடு என்று குறிப்பிடுகின்றனர். இவற்றுள் சில சான்றுகள்:

சிலப்பதிகாரத்தில் சில வேறுபாடுகள்

'முந்தை யென்னும் தார நரம்பிற்கு வலப்பக்கத்தே விளரி நின்ற தென்க’“

வேறு :

"முந்தையாகிய அசோதையென்னுந் தாரநரம்பிற்கு”

44. சிலப்பதிகாரம் 16;173-உரை. 45. திருக்கோவையார், பா. 12. 46. சிலப்பதிகாரம்,17.எடுத்துக்காட்டு, வரி.14-17, உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/130&oldid=1571205" இலிருந்து மீள்விக்கப்பட்டது