உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

117

வேறு : "விளியுமென் இன்னுயிர் வேறல்ல வென்பார்" இவ்வெழுத்து வேறுபாடுகளுள் கண்டது-கண்டன; தனநலம் - தம் நலம் என்பன ஒருமை, பன்மைப் பொருளால் வேறுபடுகின்றன. தூற்றாரெனின் - தூற்றாதெனின்; வேறல்லம்- வேறல்ல என்பன முறையே அவர் - அது; யாம் - அவை என்னும் எழுவாய்களைப் பெற்றுத் திணையாலும் இடத்தாலும் வேறுபட்டுப் பொருள் பயக் கின்றன.

-

ஓசையை மாற்றும் எழுத்து வேறுபடுதல்

வேறு :

வேறு:

ઃઃ

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்" (குறள்-706) அடுத்தது காட்டும் பளிங்கேபோல் நெஞ்சம்"

"கோலதூஉங் கோடா தெனின்’”--(குறள்-546) "கோலதுங் கோடா தெனின்”

பளிங்குபோல் - பளிங்கேபோல்; கோலதும் - கோலதூஉம் என்பன இயற்சீர் வெண்டளையினை வெண்சீர் வெண்டளையாக மாற்றி இனிய ஓசையைத் தோற்றுவித்து வரும் எழுத்து வேறுபாடுகளாகும்.

பெயர், பண்பு வேறுபடுதல்

"நல்லா றெனினுங் கொளல் தீது" (குறள் - 222)

வேறு : “நல்லா ரெனினுங் கொளல் தீது”

"நல்லா றெனப்படுவ தியாதெனின்" (குறள்-324)

வேறு : "நல்லா ரெனப்படுவ தியாதெனின்”

ஒற்று முரைசான்ற நூலும் இவையிரண்டும்"(குறள்-581) வேறு: “ஒற்று முறைசான்ற நூலும் இவையிரண்டும்”

நல்லாறு- நல்லார் என்பன தொழிற்பெயரும் உயர்திணைப் பெயருமாக வேறுபட்டு நின்றன. உரை - முறை என்பன புகழும் முறையும் ஆகிய பண்புகளால் மட்டும் வேறுபட்டன. இவ்வெழுத்து வேறுபாடுகள் பதிப்பாசிரியர்களின் ஆய்விடை நின்று தேர்ந்து

கொள்ளப்படுவனவாகும்.

சொல் வேறுபாடு : சொற்கள் மாற்றந் தந்தும் தராதும் வரும் சான்றுடன் விளக்கலாம்.

மாறுபட நின்று பொருள் வேறுபாடுகள் சிலவற்றைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/133&oldid=1571209" இலிருந்து மீள்விக்கப்பட்டது